
90 இருக்கைகள் கொண்ட ARJ21-700 உள்நாட்டு பணியர் விமானம் வெள்ளை வண்ணமுடையது. பறக்கும் பீனிக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இது 33 மீட்டர் நீளமும், இறக்கைகளோடு சேர்த்து 27 மீட்டர் அகமும் கொண்டது. தொடர்ந்து அதிக பட்சமாக 3,700 கிலோமீட்டர் பயணம் செய்யக்கூடிய இது 11,900 மீட்டர் உயரத்தில் பறக்கும் சக்தி கொண்டது என்று சீன தேசிய விமான வணிகக் கழகத்தின் பொது மேலாளர் Jin Zhuanglong தெரிவித்தார். இப்படிப்பட்ட பல்வேறு விமானப் பயண சோதனைக்கு பிறகு பயணியரோடு வானில் பயணம் செய்வதற்கு தகுதி சான்றிதழ் வழங்கப்படும். இவையனைத்து 18 திங்களுக்கு முன்பாக முடிக்கப்பட்டு ARJ21-700 உள்நாட்டு பயணியர் விமானம் சேவைக்கு வழங்கப்படும் என்று சீன தேசிய விமான வணிகக் கழகத்தின் கட்சி செயலாளர் Hu Haiyin தெரிவித்தார். ARJ21 ரக 6 விமானங்கள் சீனாவில் சோதனைப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும், இத்தகைய ரக 20 விமானங்களை ஓராண்டில் சீனாவால் தயாரிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
சீனாவால் தற்சார்பாக தயாரிக்கப்பட்டதும், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு விற்கப்படுகின்ற முதல் சீன விமானமும் ARJ21-700 என்பதால், இது சிறப்பு பெற்றுள்ளது. எல்லா நாடுகளுகளுக்கும் விற்கப்படும் அளவிற்கு சர்வதேச வரையறையை இவ்விமானம் கொண்டிருப்பதை தான் இந்த விமான வர்த்தகம் காட்டுகிறது. இதே அளவு இருக்கைகளை கொண்ட பிற விமானங்களை விட குறைந்த விலை கொண்டிருப்பது இவ்விமானத்தின் இன்னொரு சிறப்பம்சம். 30 மில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் 90 இருக்கைகள் கொண்ட Bombardier விமானத்தை விட 3 மில்லியன் குறைவாக 27 மில்லியன் அமெரிக்க டாலருக்கு இந்த ARJ21 ரக விமானம் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
1 2 3
|