5வது நூற்றாண்டின் துவக்கத்தில், புத்த மதம் திபெத்தில் பரவத் துவங்கியது. அதை அடுத்த பல நூறு ஆண்டுகளில், புத்த மதம் திபெத்தில் வளர்ச்சியடைந்த போக்கில், இதற்கும் திபெத்தின் ஆதிகால மதமான போன்(Bon) மதத்துக்கும் இடையில் தொர்ந்து சர்ச்சைகள் நிகழ்ந்தன. மீண்டும் ஏற்பட்ட மதப் போராட்டங்களிலும், இரு தரப்புகளின் மத நூல்கள் பல தீக்கிரையாக்கப்பட்டன. கோயில்களும் தகர்க்கப்பட்டு, நாசமாக்கப்பட்டன. திபெத்தில் உருவான கோயில் மூலக்கல்வியும் கடுமையாக பாதிக்கப்பட்டன. 10வது நூற்றாண்டின் பிற்பாதியில், புத்த மதம் திபெத்தில் மறுமலர்ச்சியடைந்தது, திபெத் மரபுவழி புத்த மதம் உருவாக தொடங்கியது. திபெத்திலான செல்வாக்கு மிக்க மக்கள், கோயில்களை கட்டியமைப்பதற்கு நிதியை ஒதுக்கினர். அத்துடன், கோயிலை மையமாகக் கொண்ட புத்த மதக் கோட்பாடு பற்றிய கல்வி, செழுமையடையத் தொடங்கியது.
திபெத் மரபுவழி புத்த மதத்தை சேர்ந்த பல்வேறு பிரிவுகள், தத்தமது பிரிவுகளுக்குப் பொருந்திய பாட உள்ளடக்கங்கள் மற்றும் கற்கும் வழிமுறை பற்றிய விதிகளை வகுத்தன. 15வது நூற்றாண்டில், திபெத் மரபுவழி புத்தமதப் பிரிவுகளில் ஒன்றான Gelug பிரிவு, உருவாக்கப்பட்டது. தனது கண்டிப்பான விதிகள், சிறந்த மதத் தத்துவ கல்வி முதலிய காரணங்களால், Gelug பிரிவு, இதர பிரிவுகளை விட மேலானதாக இருந்தது. இது, திபெத் அரசு மற்றும் மதத் துறையிலான தலைமையாக மாறியது. இப்பிரிவு உருவாக்கிய கோயில் கல்வி அமைப்புமுறை, திபெத் மரபுவழி புத்தமதம் மற்றும் முழு திபெத் இனக் கோயில் கல்வியின் பிரதிநிதித்துவ முறைமையாக படிப்படியாக மாறியது.
1 2 3
|