கண்டிப்பான பாடத் திட்டம், நிலையான பாட நூல், துல்லியமான கல்வி அமைப்புமுறை, ஒரு தொகுதி கண்டிப்பான தேர்வு அமைப்புமுறை மற்றும் படிப்புப் பதவி உயர்வு முறைமை ஆகியவற்றை, Gelug பிரிவு கொண்டிருந்தது. ஆசிரியாரின் கற்பித்தல், மனப்பாடம் செய்தல் மற்றும் விவாதம் நடத்துதல் மூலம், இப்பிரிவின் 5 சிறந்த தத்துவப் படிப்புகளை துறவி மாணவர்கள் கற்றுக்கொண்டு தேர்ச்சி பெற முடிந்தது. அவற்றை நிறைவேற்ற, குறைந்தது 15 ஆண்டுகாலம் தேவைப்பட்டது. இதில் விவாதம் நடத்துதல், கோயில் படிப்புகளில் தனித்தன்மை மிக்க ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. நாள்தோறும், கோயிலில் வாழும் புத்தர்கள், பல்வேறு வகுப்புகளின் மாணவர்களுக்கு வழிகாட்டல் மற்றும் ஊக்கம் அளித்தனர். மாணவர்கள் விவாதிக்கக் கூடியதன் அடிப்படை திசையை, அவர்கள் சுட்டிக்காட்டினர். அதற்கு பின், மாணவர்கள் அனைவரும் வெளிப்படையாகவும் சத்தமாகவும் விவாதம் நடத்த வேண்டும். விவாதம் நடத்தியபோது, பல்வகை திறன்கள் மற்றும் சைகை அறிகுறிகள் பயன்படுத்தப்பட்டன. விவாதத்தில் அதிக கவனத்தை ஈர்த்த மாணவர், திறமையான மாணவராக கருதப்பட்டார்.
Gelug பிரிவின் மரபுகளுக்கிணங்க, கல்வியின் உயர் நிலை, திபெத் மொழியில் Geshi என்று அழைக்கப்படுகிறது. இது, புத்தமத இயலில் முனைவர் பட்டமாக கருதப்படுகிறது. மிக நீண்டாகாலமாக கற்று, திருமுறையை மனபாடம் செய்து, அதன் உள்ளர்த்தத்தை துறவி மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு பின், தங்களது ஆசிரியாரால் பரிந்துரை செய்யப்பட்டு, Geshi என்பதற்கான தேர்வில் அவர்கள் பங்கெடுக்கப்பர்.
Geshi எனும் பட்டத்தில், நான்கு நிலைகள் இடம்பெற்றன. Lharamba Geshi என்பது, மிக உயர் நிலை பட்டமாகும். ஆண்டு தோறும் லாசாவில் நடைபெற்ற தொடர்புடைய கூட்டத்தில், மதமறை பற்றி விவாதம் நடத்துவதன் மூலம் சிறப்பான இடம் பட்டம் பெறும் Geshi, இதுவாகும். Lharamba Geshi எனும் பட்டம் பெற்ற பின் தான், லாசாவிலுள்ள மூன்று பெரிய கோயில்களிலும் இதர Gelug பிரிவுகளின் கோயில்களிலும் முக்கிய பதவியை ஏற்க முடியும்.
1 2 3
|