• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-10 16:52:43    
தியேன் ச்சின் நகரில் சீனப் பாரம்பரிய மருந்து தயாரிப்பு

cri

மட்பாண்டத்தில் தண்ணீரை ஊற்றி அதில் சில மூலிகைகளைப் போட்டு, மிதமான சூட்டில் வேகவைத்து, பிறகு வடிகட்டி கிடைக்கும் சாறு அல்லது கஷாயம், சீனப் பாரம்பரிய மருந்து என்று அழைக்கப்படுகின்றது. பல்லாயிரமாண்டு காலமாக சீன மக்கள் இத்தகைய கஷாயத்தை அருந்துவது மூலம், சிகிச்சை பெற்று குண்மடைந்து வருகின்றனர். தற்போது, சீன அறிவியல் தொழில் நுட்புப் பணியாளர்கள் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, இந்த பாரம்பரிய மருத்துவக் கலையை மேம்படுத்தி வருகின்றனர். மூலிகைகளிலிருந்து கிடைக்கும் பயன் தரும் பொருட்கள், உருண்டை, வில்லை, ஊசி மருந்து முதலிய வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன. உட்கொள்வதற்கு அவை மேலும் வசதியாக அமையும் அதேவேளையில், சிகிச்சை பயனும் உயர்த்தப்படலாம். வடக்கு சீனாவில் அமைந்துள்ள தியேன் ச்சின் மாநகரம், இத்துறையில் ஆக்கப்பூர்வமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

Tian li shi குழுமம், 1994ம் ஆண்டில் நிறுவப்பட்டது. தற்போது, தியேன் ச்சின் மாநகரில் இது பிரதிநிதித்துவம் வாய்ந்த நவீன சீனப் பாரம்பரிய மருந்து தயாரிப்புத் தொழில் நிறுவனங்களில் ஒன்றாகும். இது தயாரிக்கும் இதய நோயைக் குணப்படுத்தும் ஒரு வகை சீன மருந்தின், விற்பனை தொகை ஆண்டுக்கு சில நூறு கோடி யுவானாகும். இந்த மருந்து அண்மையில் அமெரிக்க உணவுப் பொருள் மற்றும் மருந்து நிர்வாக ஆணையத்தால் சோதனையிடப்பட்டு தரச்சான்று பெற்றுள்ளது. புத்தாக்கத்தில் ஈடுபட்டு, சீனப் பாரம்பரிய மருந்தின் நவீனமயமாக்க ஆய்வு மேற்கொள்வதே தனது தொழில் நிறுவனம் சிறந்த சாதனை பெறுவதற்கான காரணமாகும் என்று Tian li shi குழுமத்தின் தலைமை இயக்குநர் Yan xi jun எமது செய்தியாளரிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது

பத்து ஆண்டுகளுக்கு மேலாக சீனப் பாரிம்பரிய மருந்தின் நவீனமயமாக்கப் பணியில் ஈடுபடுள்ளோம். நவீன சீனப் பாரம்பரிய மருந்தின் அடிப்படையில் அதிலுள்ள பயனுள்ள பகுதிகளைப் பிரித்து சேகரித்து, தரவு களஞ்சியம் ஒன்றை உருவாக்கினோம். இந்த களஞ்சியம் மூலம் மேலும் அதிகமான புதிய மருந்துகளைத் தயாரிக்கலாம் என்றார் அவர்.

1 2 3