• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-10 16:52:43    
தியேன் ச்சின் நகரில் சீனப் பாரம்பரிய மருந்து தயாரிப்பு

cri

தியேன் ச்சின் Zhong xin மருந்து தயாரிப்பு நிறுவனம், சீனப் பாரம்பரிய மருந்தின் நவீனமயமாக்கப்பணியில் ஈடுபட்ட மூத்த தொழில் நிறுவனங்களில் ஒன்றாகும். தியேன் ச்சின் Tong ren tang, Dar en tang, Long shun rong முதலிய பல புகழ்பெற்ற சீனப் பாரம்பரிய மருந்து சின்னங்களை ஒன்றிணைக்கும் குழுமம் இதுவாகும். அந்த பழைய சின்னங்கள் நீண்ட வரலாறுடையவை. உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் புகழ்பெற்றவை. ஆனால், அவை முன்பு இருந்த சாதனைகளைச் சார்ந்திருக்கவில்லை. பதிலாக, சீன பாரம்பரிய மருந்துகளின் மேம்பாடு மற்றும் சீர்திருத்தத்திலும், புதிய தொழில் நுட்பத்தின் ஆய்விலும் ஈடுபட்டு வருகின்றன. சீன மருந்துகளின் அறிவியல் ஆய்வு, தர நிர்வாகம், உற்பத்தி மற்றும் விற்பனை, திறமைசாலி சேகரிப்பது முதலிய துறைகளில் அவை நல்ல அனுபவங்களை பெற்றுள்ளன. தியேன் ச்சின் zhong xin மருந்து தயாரிப்புக் குழுமத்தின் துணை தலைவர் zhang qiang கூறியதாவது

குறிப்பிட்ட உத்திநோக்குத் திட்டத்தை வகுத்துள்ளோம். புதிய மருந்து கண்டுபிடிப்பு, புதிய தொழில் நுட்பப் பயன்பாடு, புதிய சந்தைகளை உருவாக்குவது ஆகியவற்றின் மூலம், உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சந்தையில் எமது போட்டியாற்றலை உருவாக்கியுள்ளோம் என்றார் அவர்.

தற்போது, zhong xin மருந்து தயாரிப்பு நிறுவனம் தயாரித்த சீனப் பாரம்பரிய மருந்து வகைகள் 500ஐத் தாண்டியுள்ளன. பல வகை மருந்துகள், ஜப்பான், ரஷியா, அமெரிக்கா முதலிய 20க்கு அதிகமான நாடுகளிலும் பிரதேசங்களிலும் வரவேற்பு பெற்றுள்ளன.

சீனப் பாரம்பரிய மருந்து, சீனாவின் ஆயிரமாண்டு கால நாகரிகத்தின் அரிய செல்வமாகும். நீண்டகாலமாக அதன் சிறப்பு சிகிச்சை பயனுடன், சீனத் தேசத்தின் செழுமை பாதுகாக்கப்பட்டுள்ளது. உலக அளவில் சீனப் பாரிம்பரிய மருந்துகளின் பயனைப் பரவலாக்கி, உலக மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில், கடந்த சில ஆண்டுகளாக, சீனப் பாரம்பரிய மருந்து தயாரிப்பின் அறிவியல் மயமாக்கம், வரையறை மயமாக்கம் ஆகிய துறைகளில் சீன அரசு பல நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 3 ஆண்டுகளுக்கு முன், தியேன் ச்சின் மாநகரம், தேசிய நிலை சீனப் பாரம்பரிய மருந்து நவீனமயமாக்க அறிவியல் மற்றும் தொழில் நுட்ப உற்பத்தி தளமாக உறுதிப்படுத்தப்பட்டது.

1 2 3