• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-12 10:59:45    
சீனாவின் திபெத்தினத்தின் விழாக்கள் பற்றி

cri

திபெத் இன மக்கள் பல விழாக்களை கொண்டாடும் இனமாகும். இந்த விழாக்கள் திபெத் புத்த மதத்துடன் ஆழமான தொடர்புடையவை. விழாக்களில் சில மத விழாக்களாக மாறியுள்ளன. திபெத் இனத்தின் வசந்த நாட்காட்டியின் படி திபெத் இன மக்களுக்கு ஒவ்வொரு திங்களிலும் விழாக்கள் உண்டு. அந்நாட்காட்டியின் ஜனவரி திங்களில் புத்தாண்டு விழா கொண்டாட்டபடுகின்றது. அப்போது பிரமாண்டமான லாசா மத விழா மற்றும் பூ விளக்கு விழா கொண்டாடப்படும். பிப்ரவரி திங்களில் தேவனை வழியனுப்பும் விழா இடம்பெறும். திபெத் சந்திர நாட்காட்டியின் படி மார்ச் திங்களில் கிங்காங் விழாவும், ஏப்ரல் திங்கள் சாக்கடாவா விழாவும், மே திங்களில் ஜியுட்டன் விழா, மருந்து மூதாதையர் விழா, லிங்கா விழா மற்றும் ச்சாபுரம்புஷ் கோயிலின் சை தேவன் விழாவும் கொண்டாட்டபடுகின்றன. ஜுன் திங்கள் சோசான் விழா, ஜுலை திங்கள் சியேடன் விழா , சப்டம்பர் திங்கள் தேவன் மற்றும் தேவி விண்ணிலிருந்து மன்ணகம் வரும் விழாவும், அக்டோபர் திங்கள் விளக்கு ஏற்பு விழாவும் திபெதி பீடபூமியில் கொண்டாடப்படுகின்றன. ஆகவே ஓராண்டில் திபெத் மக்கள் நூற்றுக்கு மேலான விழாக்களைக் கொண்டாடுவர். திபெத்தில் தங்கியிருந்தால் இந்த விழாங்களை எல்லாம் கொண்டாடும் திபெத் இன மக்களின் மகிழ்ச்சியை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம் என்பதில் ஐயமேயில்லை.
1 2 3 4