• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-12 10:59:45    
சீனாவின் திபெத்தினத்தின் விழாக்கள் பற்றி

cri

இந்த நூற்றுக்கு மேலான விழாக்களில் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படும் விழா திபெத்தின் சியேடன் விழாவாக திகழ்கின்றது. திபெத்தில் புத்தமதத் துறையில் பல்வேறு கிளைகள் உள்ளன அவற்றில் மிக பெரிய மதப் பிரிவு மஞ்சள் பிரிவாகும். கோடைகாலத்தில் கோயில்களில் வாழ்கின்ற மத குருமார் வெளியே பயணம் செய்வார்கள். மக்கள் தயிரால் அவர்களை உபசரிக்கிறார்கள். தயிர் திபெத் மொழியில் சியேடன் என்று கூறப்படுகின்றது. ஆகவே மத குருமாரை உபசரிக்கும் நாளே சியேடன் விழாவாக மாறியுள்ளது. நாட்கள் செல்ல செல்ல மத குருமார்கள் மட்டுமல்ல, பொது மக்களும் அரசாங்க அதிகாரிகளும் கூட இந்த விழாவை கொண்டாடும் நிலை உருவாகியுள்ளது. இப்போது லாசாவை மையமாக கொண்டு திபெத் கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றும் விழாவாக சியேடன் விழா கொண்டாடப்படுகின்றது. இந்த கலை நிகழ்ச்சிகள் முக்கியமாக கோயில்களில் நடைபெறும். அதேவேளையில் புத்த சிலைகள் கொண்டாட்ட நடவடிக்கைகளில் காட்சிக்கு வைக்கப்படும். மக்கள் புத்த சிலைகளை வழிபட வேண்டுமாயின் சியேடன் விழாவின் போது லாசாக்கு சென்று வழிபடலாம்.

சியேடன் விழாவை கொண்டாடும் போது பொதுவாக திபெத் இன மக்கள் திபெத் நாடகங்களை கண்டு இரசிப்பர். இந்த நாடகங்கள் முக்கியமாக லொபுரிங்கா பூங்காவில் அரங்கேற்றப்படும். லொபுரிங்கா தலாய்லாமா பென்சா போன்ற புத்த மத தலைவர்கள் கோடைகாலத்தை கழிக்கும் பூங்காவாக திகழ்கின்றது. சியேடன் விழாவின் போது திபெத் பாணியுடைய நாடகங்கள் குறைந்தது 5 நாட்களாக அரங்கேற்றப்படும்.

1 2 3 4