வாழ்வு கொடையாக

சிலர் தங்களுடைய வாழ்க்கையில் அனுபவிக்கும் துன்பங்கள், பிறருக்கு ஏற்படக்கூடாது என்று எண்ணுவர். அதற்காக எடுக்கப்படும் முயற்சிகள், பலர் நலமான வாழ்வை பெறுவதற்கு அடிப்படையாக அமைந்துவிடும். ஷாங்காயில் வாழும் பிரிட்டன் தம்பதியர், தங்களுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒன்று இறந்துவிட்ட துயரத்தை ஓராண்டுக்கு முன்னர் அனுபவித்தனர். மூச்சுக்குழாய் தொடர்பான பிரச்சனையால் அவர்களது மகன் Leo இறந்துவிட்டதால், அவ்வாறு பிறக்கின்ற பிஞ்சு குழந்தைகளின் நலவாழ்வு சிகிச்சைக்கு உதவிட அறக்கட்டளை ஒன்றை தொடங்கியுள்ளனர். Scott மற்றும் Cecile Spirit தம்பதியரின் அறக்கட்டளை ஷாங்காய் குழந்தைகள் மருத்தவமனையோடு இணைந்து குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கும்.
குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளில் ஒன்றான Leo மருத்துவ சிசிச்சை பயனின்றி இறந்தான். அவனுடைய நினைவாகவும், 4 இலட்சம் யுவான் தொடக்க நிதியாகவும் கொண்டு, இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. ஷாங்காய் குழந்தைகள் நலவாழ்வு மையம் இதற்கு ஒரு இலட்சம் யுவான் அன்பளிப்பாக வழங்கவுள்ளது. சீனாவை விட்டு சென்றுவிட்டாலும் தாங்கள் தொடர்ந்து இந்த அறக்கட்டளைக்கு உதவி செய்வோம் என்று Scott மற்றும் Cecile Spirit தம்பதியர் உறுதியளித்துள்ளனர். மூச்சுக்குழாய் பிரச்சனையோடு பிறக்கும் பிச்சு குழந்தைகளுக்கு நலவாழ்வை கொடையாக வழங்கும் இம்முயற்சி பாராட்டுதற்குரியது.
1 2 3
|