வினோத கல்

ஆற்றுப்படுகைகள், நீர்வீழ்ச்சி ஓடைகள் ஆகியவற்றிற்கு அருகில், உருளைகற்களை பார்த்திருப்போம். அவை பலவிதத்தில் பல வடிவங்களில் அழகாக இருக்கும். தென்மேற்கு சீனாவின் Chongqing மாநகராட்சியில் வியப்புக்குரிய உருளைக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அலுவலக மேசையிலுள்ள தாள்கள் பறக்காமல் இருக்க, வைக்கப்படும் உருளை கற்களை விட இந்த கல் சற்று பெரிய வடிவில் உள்ளது. புவியின் மேற்பரப்பில் காணப்படும் மலை, புல்வெளி, வான்வெளி, மரங்கள், நிலப்பரப்பு போன்ற நில அமைப்புக்கு ஒத்த தோற்றங்கள் இந்த கல்லில் தெரிவது தான் சிறப்பு. Wushan வட்டத்தில் வினோத கற்களை சேகரிப்பவருடைய வீட்டில் தற்போது இது வைக்கப்பட்டுள்ளது. 1 2 3
|