பச்சை குத்துதல்
 

முன்பெல்லாம் அழியா நினைவுகளையுடைய பெயர்களையும் நம்பிக்கைக்குரிய அடையாளங்களையும் மட்டுமே பச்சைகுத்தி கொள்ளும் வழக்கம் மக்களிடம் பரவலாக காணப்பட்டது. அதுவே இப்போது பலவித வண்ணங்களில் உடலில் குத்தப்படுகின்ற கலையாக டார்டூஸ் என்ற பெயரில் வளர்ந்து வருகிறது. மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளுக்கும் டார்டூஸ் குத்துதல் வழக்கமாகி வருகிறது. டாட்டூஸ் குத்தப்பட்ட பன்றிகளை வணிக ரீதியில் அதிக விலை பெறுவதற்குரிய கருவியாக பெல்ஜியம் ஓவியர் Wim Delvoye பயன்படுத்துகின்றார். பெய்ஜிங்கின் புறநகரில் பன்றி பண்ணை வைத்துள்ள அவர், டாட்டூஸ் குத்தப்பட்ட பன்றிகளை அதிகபட்சமாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர் வரை விற்றுவருகிறார். டிஸ்னி வடிவங்கள், புராணக்கதை கதாபாத்திரங்கள், சித்திர வரைபடங்கள், மலர்கள் என பல்வேறு வடிவங்களில் பன்றிகளின் மேல் டார்டூஸ் வரையப்படுகிறது.
1 2 3
|