அண்மையில், சீன அரசு, வாகனத் தொழிலை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை வெளியிட்டது. இலகு ரக வாகனங்களின் வரிவசூலிப்பைக் குறைப்பது, கிராமப்புற வாகனச் சந்தையைப் புதுப்பிப்பது, தற்சார்புப் புத்தாக்க மற்றும் தொழில்நுட்ப சீரமைப்பிற்கு ஆதரவளிப்பது முதலியவை இந்த நடவடிக்கைகளில் அடங்குகின்றன. இவை, சீன வாகனத் தொழில் நிறுவனங்களை பெரிதும் ஊக்குவித்துள்ளன. அவை, 2009ம் ஆண்டில் விரிவான வளர்ச்சித் திட்டத்தை வகுத்துள்ளன.
புள்ளிவிபரங்களின்படி, 2008ம் ஆண்டில் சீனாவின் வாகன தொழில் நிறுவனங்கள் சந்தையில் வகித்த பங்கு, கொஞ்சம் குறைந்துள்ளது. சர்வதேச நிதி நெருக்கடியின் பரவலால், 2008ம் ஆண்டின் முற்பாதியில் சர்வதேச எண்ணெய் விலை உயர்வாக இருந்தது. உருக்குச்சுருளின் விலையும் உயர்ந்து வருகின்றது. இக்காரணங்களால் சீன வாகனத் தொழில் நிறுவனங்களின் லாபம் பாதிக்கப்பட்டது. பாதகமான நிலைமையில், அவை வளர்ச்சித் திசையை சரிப்படுத்தின.
சீனாவின் புகழ் பெற்ற Qirui தற்சார்பு வாகனத் தொழில் நிறுவனம், பங்கு முதலீட்டு முறை சீர்திருத்தத்தை நிறைவேற்றியது. அடுத்து, உலகில் புகழ் பெற்ற சீன வாகன சின்னத்தை உருவாக்குவது, அதன் எதிர்கால இலக்காக மாறியுள்ளது. இது குறித்து. அந்த நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் jin yibo கூறியதாவது,
2009ம் ஆண்டில், எங்கள் தொழில் நிறுவனம் ஒரு மேலும் பெரிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. உலகளாவிய நிதி நெருக்கடியை எதிர்கொண்ட போதிலும், எங்கள் வளர்ச்சி மாறாது. 15 வகை புதிய வாகனங்களை சந்தைப்படுத்துவோம் என்று அவர் குறிப்பிட்டார்.
1 2 3
|