• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-16 10:58:47    
சீன வாகனத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி

cri

போட்டியில் வெற்றி பெற வேண்டுமானால், உற்பத்திப் பொருட்களின் தரத்தை உயர்த்த வேண்டும். சிறந்த தரத்தின் மூலம் நுகர்வோரின் ஆதரவை பெற வேண்டும். Qirui வாகனத் தொழில் நிறுவனம் தவிர, சீனாவின் பிற தற்சார்பு வாகனத் தொழில் நிறுவனங்களும் இதை உணர்ந்து கொண்டன. இது குறித்து, சீன பெருஞ்சுவர் வாகனத் தொழில்நிறுவனத்தின் மேலாளர் wang fengying அம்மையார் கூறியதாவது,

உள்நாட்டு சந்தையில் போட்டித் திறனை உயர்த்துவதோடு, உலக சந்தையில் வரவேற்பு பெறுவது மேலும் முக்கியமாக உள்ளது. எனவே, உற்பத்திப் பொருட்களின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றார் அவர்.

தவிர, மைய தொழில் நுட்பம், வெற்றி பெறுவதற்கு முக்கிய தேவையாகும். சீன வாகனத் தொழில் நிறுவனங்கள் பாரம்பரிய வாகன மைய தொழில்நுட்பத்தில் உலகின் முன்னேறிய நிலையுடனான இடைவெளியைக் குறைக்க முயன்று வருகின்றன. அதே வேளையில், புதிய எரியாற்றலை பயன்படுத்தும் வாகனத்தின் மையத் தொழில்நுடபம் பற்றிய ஆய்வில் ஆக்கப்பூர்வமாக கலந்து கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, சீனாவின் biyadi வாகனத் தொழில் நிறுவனம், 2008ம் ஆண்டின் டிசம்பர் திங்கள், உலகின் முதலாவது இரும்பு மின்கலம் மற்றும் பெட்ரோல் என இரு எரிபொருள் வாகனத்தை தயாரித்தது.

இது, biyadiஇன் தொழில்நுட்ப புத்தாக்க ஆற்றலை பிரதிநிதித்துவப்படுவதாக அதன் வெளியுறவு தொடர்புத் துறை மேலாளர் xu an தெரிவித்தார்.

இரும்பு மின்கலம், எங்கள் மைய மேம்பாடாகும். நிலையான தன்மை, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு முதலிய துறைகளில், அது, வாகனத் தொழிலில் முன்னேறிய நிலையை கொண்ட மேம்பாடாகும் என்றார் அவர்.

உயர்வான தரம் மற்றும் முன்னேறிய தொழில்நுட்ப ஆராய்ச்சி தவிர, சீனாவின் வாகனத் தொழில் நிறுவனங்கள், புதிய சந்தையை விரிவாக்கி வருகின்றன. சீன qirui வாகனத் தொழில் நிறுவனம், கிராமப்புறச் சந்தையை விரிவாக்குவதை, புதிய வளர்ச்சி இலக்காகக் கொண்டுள்ளது. கிராமப்புற வாகனச் சந்தையை வளர்க்கின்ற சீன அரசின் கொள்கையுடன் இது இசைவாக உள்ளது. இது பற்றி, இத்தொழில்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் jin yibo கூறியதாவது,

கிராமப்புறங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ற சிறிய ரக வாகனங்களை நாங்கள் ஆராய்ந்து தயாரித்துள்ளோம். நகரபுறத்துக்கும் கிராமப்புறத்துக்குமிடை போக்குவரத்து தொழில் மேற்கொண்டோருக்கு, இத்தகைய வாகனம் மிகவும் பொருத்தமானது. நாங்கள் இந்த வணிக வாய்ப்பை கைப்பற்றிக்கொண்டோம் என்று அவர் விளக்கினார்.

1 2 3