சீனாவின் வாகனத் தொழில் நிறுவனங்கள், 2009ம் ஆண்டின் வளர்ச்சி மீது நிறைந்த எதிர்பார்ப்பை கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, சீனாவின் biyadi வாகனத் தொழில்நிறுவனம், விற்பனையை 2 மடங்காக அதிகரிப்பது என்ற 2008ம் ஆண்டின் இலக்கை நிறைவேற்றியது. இவ்வாண்டு, அது, விற்பனை இலக்கை 2008ம் ஆண்டை விட தொடர்ந்து 1 மடங்கு அதிகரிப்பதென திட்டமிட்டுள்ளது. நாட்டின் சாதகமான கொள்கைகளுக்கான, இலகு ரக வாகனங்களின் வரிவசூலிப்பை குறைப்பது என்ற கொள்கை, இந்த இலக்கின் நனவாக்கத்திற்கு முக்கிய பங்காற்றும். இத்தொழில் நிறுவனத்தின் வெளியுறவு தொடர்புத் துறை மேலாளர் xu an மேலும் கூறியதாவது,
எங்கள் தொழில் நிறுவனம் 2009ம் ஆண்டில் தயாரிக்கும் வாகனங்களில் பெரும்பாலும், இலகு ரக வாகனங்களாகும். அதனால், வரிவசூலிப்பு தொடர்பான செய்தி எங்களுக்கு மிகவும் சாதகமானது. இது, வாகனத்தின் விற்பனைக்கு உறுதுணையாக அமையும் என்றார் அவர்.
தவிரவும், சீன qirui வாகனத் தொழில் நிறுவனம், 4 இலட்சத்து 20 ஆயிரம் வாகனங்களை விற்பனை செய்வது என்ற விற்பனை இலக்கை வகுத்துள்ளது. சீன jili வாகனத் தொழில் நிறுவனம், இவ்வாண்டின் விற்பனையை, 25 விழுக்காடு அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இவ்விலக்குகள், சீன வாகன தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பை பெரிதும் தாண்டின.
சீனா ஏன் உலக வாகன சந்தை, கூடியவிரைவில் நிதி நெருக்கடியை சமாளித்து மீண்டும் செழுமை பெறும் என்று எதிர்பார்க்கிறோம். 1 2 3
|