• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-23 16:03:52    
ஹலொங்ஜியாங் மாநிலத்தின் ஏற்றுமதி தொழில் நிறுவனங்கள்

cri

உலக நிதி நெருக்கடி ஏற்பட்ட பின், கடந்த ஆண்டின் இறுதி முதல், இவ்வாண்டின் துவக்கம் வரையான 3 திங்களில், சீனாவின் மொத்த ஏற்றுமதித் தொகை குறைந்து வருகின்றது. வெளிநாட்டு வர்த்தக வளர்ச்சிப் போக்கு படிப்படியாக மோசமாகியுள்ளது. இந்த நிலைமையில், உற்பத்திப் பொருட்களின் தொழில் நுட்பத்தை மேம்படுத்தி, சந்தையிலான தகுநிலையை மாற்றி, விற்பனைக்கு பின்பான சேவைகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை, சீனாவின் வட கிழக்குப் பகுதியிலுள்ள ஹெலொங்ஜியாங் மாநிலத்தின் ஏற்றுமதி தொழில் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. ஆகையால், உலக நிதி நெருக்கடியை அவை ஆக்கப்பூர்வமாகச் சமாளிக்க முடியும். தொழில் நிறுவனங்களுக்கு உள்ளூர் அரசும் வழிகாட்டி ஆதரவளிக்கின்றது. எனவே, இவ்வாண்டின் ஜனவரி திங்களில், ஹெலொங்ஜியாங் மாநிலத்தின் மொத்த ஏற்றுமதித் தொகை, 20 விழுக்காடு அதிகரித்தது.

சாதனத் தயாரிப்புத் தொழில் துறை மற்றும் இயந்திர மின் உற்பத்திப் பொருட்கள், இம்மாநிலத்தின் முக்கிய ஏற்றுமதி உற்பத்திப் பொருட்களாகும்.

1 2 3