சீனாவின் மிகப் பெரிய இயந்திர குழுமம், ஜிஜிஹல் நகரின் முதலாவது தானியங்கி இயந்திர தொழிற்சாலை முதலியவை, ஹெலொங்ஜியாங் மாநிலத்தின் ஜிஜிஹல் நகரில் காணப்படுகின்றன. சில இன்னல்களை எதிர்நோக்கிய போதிலும், உற்பத்திப் பொருட்களின் தொழில் நுட்பத்தை மேம்படுத்தி, உற்பத்திப் பொருட்களின் கட்டமைப்பைச் சரிப்படுத்துவதன் மூலம், உற்பத்தி மற்றும் விற்பனை பிரச்சினைகளை, இந்த தொழில் நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க அளவில் சமாளித்துள்ளன. உயர் தொழில் நுட்ப ஆராய்ச்சிக்கான நிதியை அதிகரித்து, தற்சார்பும், சர்வதேசச் சமூகத்தின் முன்னேறிய நிலையும் கொண்ட உற்பத்திப் பொருட்களை உருவாக்கி வளர்க்க வேண்டும். சீனாவின் மிகப் பெரிய இயந்திர குழுமத்தின் துணை இயக்குநர் சுன்மின் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளின் தேவைகளுக்கேற்ப, எமது உற்பத்திப் பொருட்களின் கட்டமைப்புகளை உரிய நேரத்தில் நாங்கள் சரிப்படுத்தி வருகின்றோம். தொடர்புடைய கொள்கைகளைப் பின்பற்றி, உற்பத்திப் பொருட்களை வளர்த்து, சந்தையை விரிவாக்கி வருகின்றோம். சந்தையித் தேவைக்கிணங்க, உற்பத்திப் பொருட்களின் கட்டமைப்பை மேம்படுத்தி வருகின்றோம் என்று அவர் விளக்கினார்.
தற்போது, உலோகப் பற்றவைப்பு உள்ளிட்ட முன்னேறிய உற்பத்தி ஆற்றல்களை சீனாவின் மிகப் பெரிய இயந்திர குழுமம் பெற்றுள்ளது என்று தெரிகிறது.
சொந்த உற்பத்திப் பொருட்களின் தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதோடு, இந்த மாநிலத்தின் தொழில் நிறுவனங்கள் சில, தொழில் சின்னங்களின் மதிப்பை அதிகரிப்பதில் முயற்சியுடன் ஈடுபட்டு வருகின்றன. நிதி நெருக்கடியால், வெளிநாட்டு வாகனச் சந்தை மந்தமான நிலையில் இருக்கிறது. ஆனால், ஹார்பின் நகரில், சீனாவின் தற்சார்புப் புத்தாக்கம் வாய்ந்த ஹாஃபெ வாகன தொழில் குழுமம், வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுடன் ஒத்துழைத்து, இந்த தொழில் நிறுவனத்தின் மீதான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இது குறித்து, இந்த தொழில் நிறுவனத்தின் துணை தலைமை மேலாளர் சான் ஹெய் சிங் கூறியதாவது
வெளிநாட்டுச் சந்தையில், எமது தொழில் நிறுவனம் எப்பொழுதும் கவனம் செலுத்தி வருகிறது. சிறப்புச் சந்தையின் கொள்கை மற்றும் தேவைக்கிணங்க, உற்பத்திப் பொருட்களை விரைவாக சரிப்படுத்தும். உலகில் புகழ் பெற்றதொழில் நிறுவனங்களுடன் ஒத்துழைத்து, தொழில் நுட்பத்தை நாங்கள் வளர்த்து வருகின்றோம் என்று சான் ஹெய் சிங் குறிப்பிட்டார்.
1 2 3
|