• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-23 16:03:52    
ஹலொங்ஜியாங் மாநிலத்தின் ஏற்றுமதி தொழில் நிறுவனங்கள்

cri

வெளிநாடுகளிலுள்ள வாடிக்கையாளருடனான உறவில் சில தொழில் நிறுவனங்கள் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றன. உற்பத்திப் பொருட்களின் தரம் மட்டுமல்ல, விற்பனைக்குப் பிந்திய சேவை மற்றும் உத்தரவாதம் முக்கியத்துவம் வாயந்தது. ஹார்பின் நகரின் சான் யின் ஜன்னல் தயாரிப்புத் தொழில் நிறுவனத்தின் தலைமை மேலளார் சௌ பிங் கூறியதாவது

 

ஏற்றுமதிப் போக்கில், எமது தொழில் நிறுவனம் பல இன்னல்களை எதிர்நோக்குகிறது. உற்பத்திப் பொருட்களின் தரத்தை உத்தரவாதம் செய்வது, ஏற்றுமதி பணியை நடைமுறைப்படுத்தும் முக்கிய அம்சமாக நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம் என்றார் அவர்.

இம்மாநிலத்தின் ஏற்றுமதித் தொகை, ஜனவரி திங்களில், விரைவான வளர்ச்சிப் போக்கை நிலைநிறுத்திய போதிலும், நிதி நெருக்கடியால் ஏற்பட்ட பாதிப்பு மோசமாகியுள்ளது என்று மதிப்பிடப்படுகிறது. எனவே, இனி, ஏற்றுமதி நிலைமைக்கேற்ப, தொழில் நிறுவனங்களின் தொடர்புடைய பணிகளை இம்மாநிலம் மேற்கொள்ளும் என்று இம்மாநிலத்தின் வணிகத் ஆணையத்தின் துணைத் தலைவர் சான் ஹவு மெய் அம்மையார் தெரிவித்தார். இது பற்றி, அவர் கூறியதாவது

தொழில் நிறுவனங்களில் கவனம் செலுத்துவது மிக முக்கியமானது. சர்வதேசச் சந்தையை விரிவாக்கப் பாடுபட்டு, தொடர்புடைய சந்தை, வாடிக்கையாளர்கள் மற்றும் உற்பத்திப் பொருட்களின் வகைகளை உணர்வுப்பூர்வமாக ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு முடிவுகளின் படி, குறிப்பிட்ட திட்டங்களை வகுத்து, உற்பத்தியை படிப்படியாக நடைமுறைப்படுத்தும் வழியை புரிந்துகொள்ளலாம் என்று அவர் கூறினார்.

தற்போது, பாரம்பரிய மேம்பாடு வாய்ந்த தொழில் துறை மற்றும் உற்பத்திப் பொருட்களை வலுப்படுத்தும் அடிப்படையில், சேவை, பெரு காட்சிப் பொருளாதாரம் முதலியவற்றை விரிவாக்கி, சொந்த மேம்பாடுகளை ஹெலொங்ஜியாங் மாநிலம் பின்பற்றி வருகின்றது. வட கிழக்காசிய பொருளாதார வர்த்தக வளர்ச்சி மண்டலத்தின் கட்டுமானத்தை விரைவுபடுத்துவதன் மூலம், நிதி நெருக்கடியை சமாளிக்கலாம் என்பது அவர்களது நம்பிக்கை.


1 2 3