• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-25 09:47:52    
திபெத் கல்வித் துறையின் வளர்ச்சி

cri

1906ம் ஆண்டு, லாசாவில் வழக்குகளை பரிசீலனை செய்ய அமைச்சர் சாங் யின்டாங்கை அப்போதைய சீனாவின் சிங் வம்ச அரசு அனுப்பியது. திபெத் சென்றடைந்த பின், அவர் உள்ளூர் அரசு அதிகாரிகளுடன் பரந்த அளவில் தொடர்பு கொண்டு, தொடர்பான நிலைமையை அறிந்து கொண்டார். இருப்பின், அப்போது பிரிட்டன் ஏகாதிபத்திய சக்தி, திபெத்தைக் கைப்பற்ற திட்டமிட்டது. எனவே, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பூர்ஜுவா வர்க்கங்களின் செயல்பாடுகளை கற்றுக்கொள்ள, சாங் யின்டாங் முன்வைத்தார். அத்துடன், திபெத் வளர்ச்சி பற்றிய ஒரு தொகுதி கொள்கை மற்றும் நடவடிக்கையை, அவர் சிங் வம்ச அரசிடம் முன்மொழிந்தார். பள்ளிகளை உருவாக்குவது, இக்கொள்கையில் இடம்பெற்றது. அதே ஆண்டு, சிங் வம்ச அரசு நியமித்த திபெத்திற்கான அமைச்சரான லியன்யு, திபெத் சென்றடைந்தார். திபெத் இனப் பிரதேசத்தில் பள்ளிகள் குறைவாக இருந்தாகவும் கல்வி பின்னடைவடைந்ததாகவும், அவர் உணர்ந்துள்ளார். திபெத்தில், 6 ஆண்டுகால துவக்கப் பள்ளி, 3 ஆண்டுகால இடை நிலை பள்ளி, 3ஆண்டுகால மேனிலை பள்ளி ஆகியவற்றை உருவாக்குமாறு, லியன்யு அரசை கோரினார். அவரது ஆலோசனைக்கு சிங் வம்ச அரசு அனுமதி அளித்த பின், லாசாவில் உடனடியாக துவக்க பள்ளி கட்டியமைக்கப்பட்டது. பின்னர், எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தி, ராணுவ திறமைசாலிகளை வளர்க்கும் வகையில், திபெத்தில் இராணுவ அறிவை கற்பிக்கும் இராணுவப் பள்ளி ஒன்றை, லியன்யு உருவாக்கினார். லியன்யு உருவாக்கிய இத்தகைய கல்வி மாதிரி, லாசாவிலிருந்து துவங்கி, படிப்படியாக திபெத்தின் பிற பிரதேசங்களிலும் பரவலாகியது.
1 2 3