19வது நூற்றாண்டின் இறுதி முதல் 20வது நூற்றாண்டின் துவக்கம் வரையான காலத்தில், பிரிட்டன் ஏகாதிபத்தியம் தொடர்ந்து 2முறை திபெத்தை ஆக்கிரமித்தபோது, திபெத்தின் உறுதியான எதிர்ப்பை சந்தித்தது. எனவே, பிரிட்டன் தனது உத்தியை மாற்றி, திபெத்தின் உயர் மட்டத்தில் பிரிட்டனுக்குரிய சாதகமான சக்தியை வளர்க்கத் துவங்கியது. மேலும், பண்பாட்டு ஆக்கிரமிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 1943ம் ஆண்டு்க்கு முன்பும் அதன் பின்னரும், பிரிட்டன், சியங்செ மற்றும் லாசா நகரங்களில் ஆங்கில மொழி பள்ளிகளை உருவாக்கியது. ஆனால், இப்பள்ளிகளுக்கு, திபெத் உள்ளூர் மக்கள் வண்மையான எதிர்ப்பு தெரிவித்தனர். சில திபெத் இன அதிகாரிகளும் லாசாவின் மூன்று பெரிய துறவியர் மடங்களின் மதத்துறையினரும் உள்ளூர் அரசுக்கு ஆலோசனை வழங்கி, துறவிகள் மற்றும் மக்களின் விருப்பத்துக்கு பொருந்தாத இப்பள்ளிகளை உடனடியாக மூட வேண்டுமென்று கோரினர். பெருமளவிலான எதிர்ப்பு மற்றும் நிர்ப்பந்ததில், திபெத் உள்ளூர் அரசு இந்த ஆங்கில மொழி பள்ளிகளை மூடியது.
1 2 3
|