• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-25 09:47:52    
திபெத் கல்வித் துறையின் வளர்ச்சி

cri

லாசாவில் அரசு சார் துவக்கப் பள்ளியை உருவாக்குவது குறித்து, கலந்தாய்வு நடத்த, கோமின்டாங் கட்சியின் நடுவண் அரசு 1934ம் ஆண்டு அதிகாரிகளை அனுப்பியது. ஆனால், அப்போதைய திபெத் உள்ளூர் அரசு அதை புறக்கணித்தது. அதன் விளைவாக, இப்பள்ளி 3 ஆண்டுகளுக்கு பின் மாணவர் சேர்க்கையை கடினமான நிலையில் துவக்கியது. சில ஆண்டுகளில் ஆசிரியர் மற்றும் கட்டிடம், பாடத்திட்டம் ஆகியவை சரிப்படுத்தப்பட்ட பின், பள்ளிகள் வளர்ச்சியடைந்தன. 1946ம் ஆண்டு லாசா துவக்கப் பள்ளியில் இருந்த மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 300ஆகும். 1949ம் ஆண்டு நவ சீனா நிறுவப்பட்ட போது, இப்பள்ளியின் செயல்பாடு நிறுத்தப்பட்டது.

பண்டைய திபெத்தின் லாசா மற்றும் சிகாசெ நகரங்களிலும், தனிநபர் உருவாக்கிய பள்ளிகள் சில இருந்தன. இப்பள்ளிகள் சிறப்பாக பிரபுக்கள் மற்றும் வணிகர்களின் குழந்தைகளுக்கு திறந்து வைக்கப்பட்டன. பள்ளிகளில் தொடர்புடைய கல்வியை முடித்து கொண்ட பின், துறவியர் அதிகாரிகள் மற்றும் துறவியர் சாரா அதிகாரிகளை வளர்க்க திபெத் உள்ளுர் அரசு உருவாக்கிய இரு பள்ளிகளில், ஒரு பகுதி மாணவர்கள் சேர்ந்தனர். 1951ம் ஆண்டு, திபெத் அமைதி விடுதலை பெறுவதற்கு முன்பு, திபெத்தில் 6 பழைய அதிகார பள்ளிகளும் சில தனிநபர் பள்ளிகளும் மட்டுமே இருந்தன. மொத்தம் ஏறக்குறைய 2000 மாணவர்கள், இப்பள்ளிகளில் பயின்றனர்.


1 2 3