திரைப்படமாக சீன குரங்கு அரசர்

இந்திய இயக்குனர் Shekhar Kapur சீனாவின் புராண கதாப்பாத்திரமான குரங்கு அரசரை திரைப்படமாக எடுக்க, திட்டமிட்டுள்ளார். மேலைநாடுகளின் புகழ்பெற்ற சூப்பர்மேன், ஸ்பைடர் மேன் கதாபாத்திரங்களுக்கு மாற்றாக, சீன புராண கதாநாயகன் குரங்கு அரசரை உருவாக்க வேண்டும் என்று சீன பெய்ஜிங் சர்வதேச பண்பாடு மற்றும் படைபாற்றல் தொழில்துறை கண்காட்சியில் Shekhar Kapur தெரிவித்தார். இதைப்பற்றி சீன இயக்குனர் Zhang Jizhong வுடன் ஏற்கெனவே பேசியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். திரைப்படத்திற்கான கரு, மேற்குக்கு பயணம் என்ற சீன புதினத்தின் பின்னணியில் உதித்துள்ளது. சீன மொழியில் Sun Wukong எனப்படும் குரங்கு அரசர் பௌத்த ஏடுகளை தேடிச் செல்லும் புத்ததுறவியின் பாதுகாப்பிற்கு உதவுகிறார். பயமற்றவராகவும், போரிடும் பண்புடையவராகவும் விளங்கும் இந்த குரங்கு அரசர் மாந்திரீக உலகில் தன்னுடைய உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவதாக புதினம் விவரிக்கிறது.
1 2 3
|