வெறுப்பை காட்டும் விலங்கு

பொதுவாக நாய்கள் மனிதரோடு நெருங்கி பழகும் வீட்டு விலங்குகளில் ஒன்று. எறக்குறைய குடும்ப உறுப்பினருக்கு இணையான கவனத்தை பெறும் நாய்களிடம் போட்டி, பொறாமை போன்ற பண்புகள் இல்லை என்று எண்ணி வருகின்றோம். ஆனால் மனிதர்களை போன்று சில உணர்வுகளை நாய்கள் காட்டக்கூடியவை என்றும், நியாயமற்ற சூழ்நிலைகளை அறிந்துகொண்டு பகைமை அல்லது பொறாமை போன்ற உணர்வுகளை எளிய முறையில் காட்டுகின்றன என்றும் ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். நாய்கள், தாங்கள் செய்த அதே செயல்களை செய்துகாட்டும் பிற நாய்களை பாராட்டுவோரிடம் தங்களது முன்னங்கால்களை வழங்கி கைகுலுக்க மறுப்பதை கண்டறிந்துள்ளனர். தேசிய அறிவியல் கழக இதழில் வெளியான இந்த ஆய்வில், பிற நாய்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகள் தங்களுக்கு கிடைக்காதபோது நாய்கள் அழுத்தம் எற்பட்டது போன்று செயல்பட்டு உடலை நக்கவும், தேய்க்கவும் தொடங்கிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 2 3
|