 Yang Tai Shan எனும் முதியோர் இல்லம், பெய்சிங்கின் வட மேற்கு புறநகரில் இருக்கின்றது. சுமார் மூன்று ஹெக்டர் நிலப்பரப்புடைய இந்த இல்லம், இரண்டு காட்டு பூங்காக்களை ஒட்டியமைந்துள்ளது. இங்குள்ள காற்று சுத்தமானது. நீர் தரம் மிக்கது. 2000ஆம் ஆண்டு, இம்முதியோர் இல்லம் திறந்து வைக்கப்பட்டது.
2007ஆம் ஆண்டு, அரசின் ஆதரவுடனும், பல்வேறு சமூக துறையினரின் நன்கொடையுடனும், 26 இலட்சம் யுவான் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இம்முதியோர் இல்லத்தில் 1400 சதுர மீட்டர் நிலப்பரப்புடைய சூரிய வெப்ப ஆற்றல் சேமிப்பு கருவி பொருத்தப்பட்டது.
இம்முதியோர் இல்லத் தலைவர் Xu Zhong Tang செய்தியாளரிடம் கூறியதாவது:
"சூரிய வெப்ப ஆற்றல் சேமிப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, கொதிக்கின்ற நீரின் வினியோக முறைமை முன்பை விட மேலும் அறிவியல் தொழில் நுட்ப முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு குளிர்காலத்தில், முதியோர் இல்லத்தில் உள்ள அறைகளின் வெப்பம், அதற்கு முந்தைய ஆண்டுகளின் குளிர்காலத்தில் இருந்ததை விட உயர்ந்துள்ளது. சாதாரண அறைகளின் வெப்பம், 22 திகிரி செல்சியஸ் ஆகும்" என்றார், அவர்.
சூரிய வெப்ப ஆற்றல் சேமிப்பு முறைமை பயன்படுத்தப்பட்ட பின், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரியாற்றல் சிக்கனப்பாட்டு வசதிகளை வளர்ப்பதால், தமக்கு நேரடியாக நலன்கள் கிடைத்துள்ளதாக முதியோர் இல்லத்தின் நிர்வாகிகளும் பணியாளர்களும் உணர்ந்துள்ளனர் என்று முதியோர் இல்லத் தலைவர் Xu Zhong Tang கூறினார். இம்முதியோர் இல்லக் கட்டிட பரப்பளவு, 10 ஆயிரம் சதுர மீட்டராகும். வெப்ப வசதிக்காக எண்ணெயை எரிபொருளாக இன்னும் பயன்படுத்தினால், ஒரு குளிர்காலத்தில், 8 இலட்சம் யுவான் தேவைப்படுகின்றது. 2007ஆம் ஆண்டின் குளிர்காலத்தில், சூரிய வெப்ப ஆற்றல் சேமிப்பு கருவி முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது. அதனால் அறையின் வெப்ப அளவு உயர்ந்துள்ளது, மட்டுமல்ல, 2 இலட்சம் யுவான் மட்டுமே தேவைப்படுகிறது. எஞ்சியுள்ள தொகை, இதர துறைகளில் பயன்படுத்தப்படலாம் என்று இவ்வில்லத் தலைவர் Xu கூறினார்.
1 2 3
|