
2005ஆம் ஆண்டு, இம்முதியோர் இல்லத்தில், உள்புற கழிவு நீர் கையாளும் முறைமை அமைக்கப்பட்டது. தலைவர் Xu கூறியதாவது:
"கடந்த எட்டு ஆண்டுகால முயற்சிகளுடன், முதியோர் இல்லத்தில், புகைகளும் கழிவு நீரும் இல்லை. கழிவு நீர் மறு சுழற்சி செய்யப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்ட பின், தோட்டத்தில் ஊற்றப்படலாம்." என்றார், அவர்.
இக்கழிவு நீர் கையாளும் முறைமை கட்டப்பட்டு பயன்படுத்தப்பட துவங்கிய பின், நாள்தோறும் 100 டன் கழிவு நீர் அதிகமாக தூய்மைப்படுத்தப்பட முடிகிறது. அவ்வாறு தூய்மைப்படுத்தப்பட்ட நீர், சாலைகளை கழுவவும், தோட்டத்திலுள்ள தாவரங்களுக்கு ஊற்றுவதற்கும் பயன்படுத்தப்படலாம். இவ்வாறு ஆண்டுக்கு 1400 டன் நீர் சிக்கனப்படுத்தப்படலாம்.
முதியோர் இல்லத்தின் தோட்டத்தில் 400 கன மீட்டர் அளவுடைய நீர் சேமிப்பு தொட்டி உள்ளது. இதில் ஊற்று அல்லது கிணற்று நீர் பெரும்பாலும் சேமித்து வைக்கப்படுகின்றது. ஒரு திங்கள் காலமாக, இந்த தொட்டியிலுள்ள நீர் பயன்படுத்தப்படலாம். நீர் சேமிப்பு தொட்டிக்கு அருகில், காய்கறிகள் பயிரிடும் ஒரு தோட்டம் உள்ளது. வெள்ளரிக்காய், அவரைக்காய், பசளை கீரை, வெங்காய வகை உள்ளிட்ட பல்வகை காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. இல்லத்தில் தங்கியிருக்கும் முதியோருக்கு வினியோகிக்கப்படும் காய்கறிகளில், ஒரு பகுதி, இந்த காய்கறி தோட்டத்தில் தான் பயிரிடப்படுகின்றன.
Luo Lan அம்மையாருக்கு வயது 82. அவர் நல்ல உடல் நலத்தோடு, ஏற்கனவே இரண்டரை ஆண்டுகளாக இம்முதியோர் இல்லத்தில் வாழ்கின்றார். இம்முதியோர் இல்லம் பற்றி அவர் நல்ல மதிப்பு கொண்டுள்ளார். அவர் கூறியதாவது:
"இங்குள்ள காற்று மிகவும் சுத்தமானது. நீல வானத்தில் வெள்ளை மேகங்கள் படர்ந்து காணப்படுகின்றன. பகலில் மலையில் ஏற செல்வதுண்டு. விளையாட்டை மிகவும் விரும்புகின்றேன்" என்றார், அவர்.
முதியோர் இல்லத்தில், அடிக்கடி நடைபெறும் பல்வேறு நடவடிக்கைகளில் முதியோர் அனைவரும் கலந்து கொள்கின்றனர். சதுரங்கம், சீட்டு, பில்லியாட்ஸ் விளையாடும் அறைகளிலும், பசுமையான மலை சரிவிலும் இவ்வில்லத்திலுள்ள முதியோரை அடிக்கடி பார்க்கலாம். உடல் பயிற்சி செய்யும் நடவடிக்கைகளில் கூட்டாக கலந்து கொண்டு பங்கெடுக்கும் வேளையில்தான், முதியோர் நட்புறவை அதிகரிப்பதோடு, நல்ல உடல் சுகமும் பெற முடியும் என்று Luo Lan அம்மையார் கூறினார். முதியோருக்கு பொழுதுபோக்கு இடங்களையும் வாய்ப்பையும் வழங்குவது, அவர்களின் உளநல வளர்ச்சிக்கு துணைபுரியும் என்றும், ஏன் தீரா நோய்கள் கூட தணிவடையலாம் என்றும் தலைவர் Xu கூறினார்.
1 2 3
|