• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-01 09:33:31    
பெய்சிங் மாநகரின் Yang Tai Shan முதியோர் இல்லம்

cri

86 வயதான Yi Ke அம்மையார், தமது நண்பரின் பரிந்துரையுடன், 2008ஆம் ஆண்டின் துவக்கத்தில் Yang Tai Shan முதியோர் இல்லத்தில் குடிபெயர்ந்தார். அவர் இவ்விடத்தை மிகவும் நேசிக்கின்றார். அவர் கூறியதாவது:

"இங்குள்ள சுற்றுச்சூழல் மிகவும் நல்லது. இந்த இடம், வடிநில பகுதியாகும். இதன் நான்கு பக்கங்களிலும், மலைகள் அமைந்துள்ளன. மலைகள் அதிக உயரமில்லை. முதியோர் இல்லத்தின் வெளிப்புறத்தில் சிங்கோ மர காடுகள் இருக்கின்றன. இல்லத்தின் தோட்டத்தில், தேவதாரு மரங்களும் சைபிரஸ் மரங்களும் அதிகமாக உள்ளதோடு, சிங்கோ மற்றும் Peach மரங்களும் இருக்கின்றன. முதியோர் இல்லத்தின் தோட்டத்தில் சிறிய பூங்கா நன்றாக நிறுவப்பட்டுள்ளது. இங்குள்ள காற்று தூய்மையானது. நீர் தரம் மிக்கது" என்றார், அவர்.

Yang Tai Shan முதியோர் இல்லமும், Hang Tian மருத்துவமனையும் இணைந்து ஒத்துழைக்கும் உறவை உருவாக்கியுள்ளதால், முதியோர் இல்லத்தில், Hang Tian மருத்துவமனை மருத்துவர்கள் சேவை புரிகின்றனர். முதியோருக்கு அவசர நிலைமைகள் ஏற்படும் போது, முதியோர் இல்லத்தில் உள்ள அவசர ஊர்தி மூலம் உடனடியாக Hang Tian மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர்.

Yang Tai Shan முதியோர் இல்லத்தில், Luo Lan, Yi Ke போன்ற முதியோர்கள் அதிகம். இல்லத் தலைவர் Xu Zhong Tangஉம், இதர பணியாளர்களும், இங்குள்ள முதியோர் மேலும் இன்பமாக வாழ்க்கை நடத்துவதற்கு மேலதிக, நல்ல வசதிகளை வழங்குகின்றனர். முதியோர், இந்த இல்லத்தை தனது வீடாக கருதுகின்றனர். இவ்வில்லத்தை விரிவாக்குவது பற்றி அதன் தலைவர்கள் கருத்தில் கொண்டுள்ளனர். இதற்கு இசைவான வசதிகளையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வசதிகளையும் வழங்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். எதிர்காலத்தில், மேலதிக முதியோர், Yang Tai Shan முதியோர் இல்லத்துக்கு வந்து, தங்கியிருந்து, இன்பமான வாழ்க்கையை அனுபவிக்கலாம்.

நேயர்கள் இது வரை இன்றைய "பெய்சிங் மாநகரின் Yang Tai Shan முதியோர் இல்லம்" பற்றி கேட்டீர்கள். இத்துடன் இன்றைய "சீன சமூக வாழ்வு" நிகழ்ச்சி நிறைவுற்றது.


1 2 3