வேண்டாத சிவப்பு

சிவப்பு வண்ணம் சீனாவில் மகிழ்ச்சி, வளமை, பெரும்பேறு ஆகியவற்றை குறிப்பதாக உள்ளது. அது பெறும்பேற்றை கொண்டுவரும் என்று எண்ணப்படுகின்றது. ஆனால் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பள்ளி ஆசிரியர்கள் சிவப்பு வண்ணத்தை பயன்படுத்துவது மாணவ மாணவியரில் உளவியல் சிக்கல்களை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது. நல்ல உளநல சூழ்நிலை உருவாக ஏறக்குறைய 30 பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட உத்திகளில் ஆசிரியர்கள் சிவப்பு வண்ணம் பயன்படுத்துவதை மாணவ மாணவியர் விரும்புவதில்லை என்பதால் வேறு வண்ணங்களை பயன்படுத்த அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிவப்பு பேனா கொண்டு எழுதப்பட்டாதால் அது தங்களது பலவீனத்தை சுட்டிக்காட்டுவதாக அமைகிறதாம். இதை பற்றி அரசு ஆலோசனை செய்து வருகிறது. வேறு வண்ணத்தை பயன்படுத்த தொடங்கிய பின்னர் இதுபோன்ற நிலை தொடராது என்பது கேள்விகுறியே.
1 2 3
|