திறமைகள் பிறர்க்காய்

பல்வேறு சாதனையாளர்களின் திறமைகள் பிறருக்கு பயன்படும் விதமாக சமூகத்திற்கு அர்பணிக்கப்படுகிறது. அவற்றை நாம் பல்வேறு விதங்களில் நமது இன்னல்களை நீக்க பயன்படுத்தி வருகின்றோம். நியுசிலாந்து பாடகி Karen Davy ஏறக்குறைய 48 மணிநேரம் தொடர்ந்து பாடி, முந்தைய உலக பதிவை முறியடித்து, உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். இந்த நிகழ்ச்சி Auckland, நகர தாவரவியல் மையத்தில் நடைபெற்றது. மொத்தமாக 47 மணி 29 நிமிடங்கள் பாடிய அவர் முந்தைய உலக பதிவை விட 51 நிமிடங்கள் அதிகமாக பாடியுள்ளார். சிறுநீரக பிரச்சனைகளால் துன்பப்படும் குழந்தைகளுக்கு உதவும் நிதிக்கு, இந்த சாதனை நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் தொகை வழங்கப்படுகிறது. நியுசிலாந்து பாடகி Karen Davy யின் திறமை சிறுநீரக நோயால் துன்பப்படும் பிஞ்சு குழந்தைகளின் துயர்துடைக்கப் போகிறது. 1 2 3
|