இவ்வாண்டின் பிப்ரவரி திங்கள் வரை, சீன அரசு பத்து தொழில்களை சீரமைத்து வளர்க்கும் திட்டங்களை வெளியிட்டது. வாகனம், இரும்புருக்கு, நெசவு, கப்பல் தயாரிப்பு, மின்னணு தகவல், தொடர்பு எண்ணெய் வேதியியல் உள்ளிட்ட பத்து தொழில்கள், இதில் அடங்குகின்றன. இத்திட்டங்கள், தொழில் நிறுவனங்களின் தற்போதைய சிக்கல்களை தீர்க்கும் அதேவேளையில், சீனத் தொழிற்துறையின் தொழில்நுட்ப உயர்வுக்கும் தொழில் கட்டுக்கோப்பின் மேம்பாட்டுக்கும் துணை புரியும்.
இத்தொழில்கள், சீன தேசிய பொருளாதாரத்தில் மிக முக்கிய இடம் வகிக்கின்றன. அவற்றின் உற்பத்தி மதிப்பு, தேசிய பொருளாதாரத்தில் 3 விழுக்காட்டுக்கு மேல் வகிக்கிறது. அவற்றிலிருந்து வரி வசூலிப்பு மூலம் கிடைக்கும் தொகை, நாட்டின் மொத்த வரி வசூரிப்பில் 40 விழுக்காடு வகிக்கிறது. தவிரவும், நெசவு மற்றும் மென்ரகத் தொழிற்துறைகள் போன்றவை, சுமார் 6 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. அவை, வேளாண்மை, கிராமப்புறங்கள், விவசாயிகள் தொடர்பான பிரச்சினையின் தீர்வுக்கும், துணை புரிகின்றன.
சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்தம் கமிட்டியின் துணைத் தலைவர் liu tienan கூறியதாவது,
இந்த 10 தொழில்களில் ஈடுபட்டுள்ளோரின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியது. இவை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பிலும், பங்குச்சந்தையில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்களிலும், சுமார் 60 விழுக்காடு, வகிக்கின்றன. அதனால், இவற்றை வளர்த்தால், நிதி, வரி மூலம் வரவு, வேலைவாய்ப்பு முதலிய பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றார் அவர்.
1 2 3
|