• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-30 10:49:31    
சீனாவின் தொழில் சீரமைப்பு திட்டங்கள்

cri

தொழில் நிறுவனங்களை ஒன்றிணைந்து மீண்டும் தயாரிப்புக

ளை தொடர்வது மூலம், மூலவளங்கள் சிறந்த முறையில் பங்கிடப்படும். இதனால் தேதிய பொருளாதாரத்தின் பொதுவான திறன் உயரும். சீன தொழிற்துறை மற்றும் தகவல்மயமாக்க அமைச்சகத்தின் அதிகாரி zhu hongren கூறியதாவது,

அரசின் இத்திட்டங்கள், தொழஇல் நிறுவனங்கள் சந்தை முறையில் ஒன்றாக இணைந்து மீண்டும் தயாரிப்பை அதிகரிப்பதற்கு வழிகாட்டும். இதன் மூலம் அவை சர்வதேச அளவில் போட்டி போடும் திறனுடைய பெரிய ரக குழுமங்களாக வளர முடியும் என்று அவர் விளக்கினார்.

10 துறைகளைச் சீரமைக்கின்ற இத்திட்டங்கள், தற்போதைய சிக்கல்களைச் சமாளித்துள்ள வேளையில், இத்துறைகளின் நீண்டகால வளர்ச்சியையும் முன்னேற்றும். எடுத்துக்காட்டாக, கப்பல் தயாரிப்பு தொழிலில் தொழில்நுட்ப சீர்திருத்தத்தை வலுப்படுத்துவது, தற்சார்பு புத்தாக்கத் திறனை உயர்த்துவது, உயர் அறிவியல் தொழில் நுட்பங்களைக் கொண்ட கப்பல்களை கட்ட ஆராய்வது முதலியவற்றை இத்திட்டங்கள் முன்வைத்துள்ளன. இது, குறித்து, சீன கப்பல் தொழிற்துறை குழுமத்தின் பொறுப்பாளர் guo tongjun கூறியதாவது

கப்பல் தயாரிப்பு தொழிலுக்கு, இந்த சீரமைப்பு திட்டம், காலத்துக்கு ஏற்ற உதவியாகும். அது நடைமுறைக்கு வந்த பின், சீனா, கப்பல் தயாரிப்பில் வலிமையான பெரிய நாடாக மாற வேண்டும் என்ற இலக்கு நனவாகுவது திண்ணம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த பத்து திட்டங்கள், உள்நாட்டு நுகர்வோரை ஊக்குவிக்கும். இவை, சீன பொருளாதாரத்தின் அதிகரிப்பை தூண்டி, ஏற்றுமதி பொருட்களை உள்நாட்டு நுகர்வு பொருட்களாக மாறச் செய்யும். இக்கொள்கைகள், வர்த்தக பாதுகாப்புவாதம் அல்ல என்று சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த கமிட்டியின் துணைத் தலைவர் liu tienan தெரிவித்தார்.

எங்கள் திட்டங்களில், வர்த்தகப் பாதுகாப்புவாதத்தின் நடவடிக்கைகள் இல்லை. சந்தையின் நியாயமான போட்டி மூலம், இத்தொழில்களின் போட்டி திறனை உயர்த்தி, கட்டுக்கோப்பு சீரமைப்பை விரைவுப்படுத்தி, வலிமையாக மாற வேண்டும் என்று விரும்புகிறோம் என்றார் அவர்.


1 2 3