• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-31 09:55:48    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை: சீன வானொலி தமிழ்ப்பிரிவின் நிகழ்ச்சிகளை பற்றிய உங்களது கருத்துக்களின் எங்களது தொகுப்பாக வலம் வரும் நேயர் நேரம் நிகழ்ச்சியில் மீண்டும் உங்களோடு இணைவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
தமிழன்பன் : கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் வாயிலாக நிகழ்ச்சிக்களை பற்றிய கருத்துக்களையும், விமர்சனங்களையும் எழுதியனுப்பி வரும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை முதலில் தெரிவித்துக்கொள்கிறோம்.
கலை: சீன வானொலி நிகழ்ச்சிகளை மிகுந்த கவனத்துடன் கேட்டு, பகுத்தாராய்ந்து கருத்து கடிதங்கள் எழுதி அனுப்பும் உங்கள் முயற்சி நமது தமிழ் ஒலிபரப்பை மேலும் வளர செய்யும்.
தமிழன்பன் இன்றைய நிகழ்ச்சியில் முதலில் கடிதங்கள் வழியாக அனுப்பப்பட்ட கருத்துக்கள் இடம்பெறுகின்றன.

கடிதப்பகுதி
கலை குருணிகுளத்துப் பட்டி கே. சி. முருகன் நேருக்கு நேர் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். பேளுக்குறிச்சி செந்தில் அவர்களுடன் நடத்திய உரையாடலின் இறுதிப்பகுதியை கேட்டேன். அவர், பல ஆண்டுகளாக சீன வானொலியின் நேயராக இருந்து, நிகழ்ச்சிகளை பற்றிய கருத்து கடிதங்கள் தொடர்ந்து எழுதி வந்ததை அறிந்தேன். இவ்வாறு கருத்து கடிதங்களை தொடர்ந்து எழுதி வருவது சீன வானொலியோடு நம்மை உறுதியாக பிணைப்பதோடு சீன வானொலி நிகழ்சசிகளை பயனுள்ள முறையில் வழங்கவும் உதவும் என்பதை உணர்ந்து கொண்டேன்.
தமிழன்பன் அடுத்து, மதுரை திருமங்கலம் பி. கே. கதிரேசன் எழுதிய கடிதம். மொழி புரியாவிட்டாலும், ஒலிப்பரப்பாகும் சீனப்பாடல்கள் மிகவும் இனிமையாக இருக்கின்றன. சீனாவில் பயணம் மேற்கொண்ட சீன வானொலி நேயர்களின் பயண அனுபவங்கள், வழங்கிய விளக்கங்கள், அவர்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, தமிழ்ப்பிரிவின் சகோதர, சகோதரிகளின் இனிய உபசரிப்பு போன்றவற்றை கேட்டபோது நானே பயணம் செய்தது போன்ற உணர்வு தோன்றியது.
கலை தொடர்வது, இலங்கை காத்தான்குடியிலிருந்து ஷாமிளா எழுதிய கடிதம். நான் வாழும் பகுதியில் சீன வானொலி பற்றிய நல்லெண்ணம் நிலவுகிறது. பலருடைய கருத்துகளை கேட்டபோது மனதில் எழுந்த சிந்தனைகளை கவிதையாக வடித்துள்ளேன். அவர் எழுதிய கவிதையில் நான்கு வரிகள் உங்களுக்காக
பார்க்கின்ற பக்கமெல்லாம் உன்னைப்பற்றி பேச்சு
விளையாடும் சிறுவர்களும் உன்னை நினைச்சாச்சு
எத்தனையோ நிகழ்ச்சிகள் உன்னால் உருவாச்சு
உன் ஒலி கேட்பது எங்கள் சந்தோசம் என்றாச்சு
தமிழன்பன் அடுத்ததாக தலைஞாயிறை சேர்ந்த பி. எஸ் சேகர் சிறப்பு நிகழ்ச்சிகள் பற்றி எழுதிய கடிதம். சிறப்பு நிகழ்ச்சிகள் மிகவும் அருமையான தகவல்களை ஒலிபரப்பின. தமிழ் புத்தாண்டு, பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கிய அனைவருக்கும் பாராட்டுக்கள். இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தியதால், காசாவிலுள்ள பொது மக்களுக்கு ஏற்பட்ட இழப்பையும், பதட்ட நிலையையும் கண்முன் கொணர்வதாகவும், ஆயிரத்திற்கும் மேலானோர் இறந்ததையும், பிற இழப்புகளையும் அறிய செய்வதாகவும் செய்திகள் அமைந்தன.

1 2 3