……முனுகப்பட்டு -பி.கண்ணன்சேகர்…… சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் சகோதரி வாணி அவர்களும், சகோதரர் கிளீட்டஸ் அவர்களும் சமைக்க கற்றுத் தந்த இறால் பட்டாணி வறுவல் குறிப்புக் கேட்டேன். காதில் கேட்கும் போதே நாவில் எச்சில் ஊறியது. இத்தகைய உணவை சாப்பிட வேண்டும் என முடிவுக்கு வந்து விட்டதால், நீங்கள் கூறிய குறிப்புகளை அப்படியே எழுதிக் கொண்டேன். நீங்கள் கூறும் போதே இறால் பட்டாணி வறுவல் வாசம் இந்தியா வரை வீசும். அந்த அளவிற்கு எடுத்துச் சொன்னதற்கு நன்றிகள் பல. ......மதுரை-20 என்.இராமசாமி...... குட்டி தூக்கம் போடுவது நல்லது தான் என்று பல ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர். குறைவான தூக்கம் நம்மை விபத்திற்கு உள்ளாக்கிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர் என்பதை அறிவியல் உலகம் நிகழ்ச்சியின் மூலம் அறிந்து கொண்டேன். இவ்வாறன பற்பல அரிய சிறப்பு செய்திகளை வெளியிட்டு வரும் சீன வானொலி தமிழ்ப்பிரிவை பாரட்டுகிறேன். இது உலகில் எந்த வானொலியும் செய்யாத சாதனையாகும். வளவனூர், முத்துசிவக்குமரன் ஜனநாயக சீர்திருத்தத்தின் பொன்விழாவாக, கடந்த 50 ஆண்டுகளில் திபெத்தில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார மாற்றங்களுக்கு முக்கிய காரணம், சீன அரசு தான் என்பதினை யாராலும் மறுக்க இயலாது. இதனை சீன அரசு தனது எட்டாவது வெள்ளையறிக்கையில் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளது. அமைதியையும், முன்னேற்றத்தினையும் விரும்பும் திபெத்தியர்கள், வன்முறையாளரையும், வன்முறையையும் கண்டிப்பாக எதிர்க்கிறார்கள். மேலும், அங்கு செம்மையாக செயல்பட்டுவரும் கல்வித்திட்டம், மகளிர் மேம்பாட்டுக்கான செயல்பாடுகள், மத சுதந்திரம், பண்பாட்டினை பேணிக்காத்தல் என்று பல தளங்களிலும் விரிவான வளர்ச்சி கொண்டிருப்பதால், திபெத்தியர்கள் நடுவண் அரசினை விரும்பவே செய்வார்கள். சீன அரசின் வழிகாட்டுதலின் படி, மென்மேலும் அவர்கள் சிறப்பு பெற வாழ்த்துக்கள்.
......காளியப்பம்பாளையம் க.ராகம் பழனியப்பன்...... 13 ம் நாள் நிறைவுற்ற மக்கள் பேரவை கூட்டத்தில் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் வென்சியாபாவ் அவர்கள் 23 கேள்விகளுக்கு பதில் தந்தார். சுமார் 4 லட்சம் கோடி யுவான் நிதி உதவி வழங்கப்பட்டு பொருளாதாராம் சீர் செய்யப்படும் என அறிவித்துள்ளது ஒரு நம்பிக்கை தரும் நல்ல செய்தியாகும். முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள். .....மதுரை-20 ஆர்.அமுதாராணி...... சீன தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டதொடர் பெய்ஜிங்கில் 13ம் நாள் முடிவடைந்தது. இறுதியில் சீன தலைமை அமைச்சர் செய்தியாளர் கூட்டத்தில் கலந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இது ஒர் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் என்பது குறிபிடத்தக்கது. இச்செய்தியாளர் கூட்டத்தில் சீனாவின் பண மாற்று விகித கொள்கை, தைவான் நீரிணையின் இரு கரைகளுக்கிடையே பொருளாதார வர்த்தக உறவு மற்றும் பல முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளைப் பற்றி கேள்விகளுக்கு வென்ச்சியாபாவ் பதில் அளித்தார். ......ஊட்டி; எஸ்.கே.சுரேந்திரன்...... மலர்ச் சோலை நிகழ்ச்சியில் திரைப்படத் துறைகளுக்காக நிறுவப்பட்ட விருதுகளான கோல்டன் குலோப் விருது, பாஃப்டா விருது, மற்றும் ஹாங்காங் திரைப்பட விருது போன்ற விருதுகள் பற்றியும், இத்தாலியின் வெனிஸ் திரைப்பட விழா, லண்டன் திரைப்பட விழா, கனடாவின் டொன்டோ திரைப்பட விழா மற்றும் அமெரிக்காவின் அண்டானிஸ் திரைப்பட விழாக்கள் பற்றியும் அதன் சிறப்பு அம்சங்கள் பற்றியும் மேலதிக தகவல்களை நேயர்களுக்கு வழங்கி எங்களை வியப்பில் ஆழ்த்திய சீன வானொலிக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1 2 3
|