கலை சீன வரலாற்று சுவடுகள் நிகழ்ச்சியை பற்றி வளவனூர் புதுப்பாளையம் எஸ். செல்வம் எழுதிய கடிதம். கடந்த 30 ஆண்டுகளில் கல்வித்துறையில் ஏற்பட்ட மாபெரும் வளர்ச்சி மாற்றம் பற்றி எடுத்துக் கூறப்பட்டது. பல்வேறு தேர்வுகளில் வெற்றிபெற்று, முக்கியப்பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டு, நாட்டை பெருமளவு உயர்த்தியவர்கள் யாவரும் புதிய கல்வி முறையால் உருவானவர்கள் என்பதை அறிந்தபோது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு கல்வித்துறை சீர்திருத்தமும் ஓர் அடிப்படை காரணமாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன். தமிழன்பன் தொடர்வது, சென்னை மறைமலைநகர் மல்லிகாதேவி மக்கள் சீனம் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். சீனா உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்தது தொடர்பான நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது. இந்த அமைப்பில் சேர்ந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் சீனா பல வெற்றிகளை சாதித்துள்ளதை இந்நிகழ்ச்சி மூலம் அறிய முடிந்தது. சீன வங்கி துறையில் ஏற்பட்ட முன்னேற்றமும் தெரியவந்தது.
கலை இலங்கை புதிய காத்தான் குடியிலிருந்து எ. பி. எம். நிஹார் எழுதிய கடிதம். அறிவியல் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் உலகமே பயந்து நடுங்கும் புற்றுநோய் பற்றிய தகவல்கள் பயனுள்ளதாக அமைந்தன. அதன் வகைகள், அறிகுறிகள், ஏற்படுவதற்கான காரணங்கள், தவிர்ப்பதற்கான வழிமுறைகள் ஆகியவை வாழ்க்கைக்கு உகந்தவை. சீனாவிலிருந்து ஒலிபரப்பாகும் சீன வானொலி மூலம் தமிழ் மொழியை கேட்பது பெருமையளிப்பதோடு, சீனாவை எங்களுக்கு அறிமுகப்படுத்துவது சீன வானொலி நிகழ்ச்சிகளே. தமிழன்பன் விளையாட்டு செய்திகள் பற்றி வெண்ணந்தூர் ஜி. முஜிபூர் ரஹூமான் எழுதிய கடிம். குத்துசண்டை பற்றிய முழுமையான தகவல்களை அறிய முடிந்தது. மகளிர் குத்துசண்டையும் முக்கியமாக வளர்ந்து வருவதை இந்நிகழ்ச்சி அறிமுகப்படுத்தியது. நேயர் நேரம் நிகழ்ச்சி சீன வானொலி தமிழ்ப்பிரிவின் நிகழ்ச்சி பற்றிய கருத்து கடிதங்களின் சிறந்த தொகுப்பாக அமைகிறது. கலை பெரிய வளையம் கி. இரவிச்சந்திரன் "சீன தமிழொலி" இதழ் பற்றி எழுதிய கடிதம். "அழகான சிச்சுவான்" என்ற பொது அறிவுப்போட்டிக்கான ஏழு கட்டுரைகள் "சீன தமிழொலியில் இடம் பெற்றன. மேலும் மலைகள், ஏரிகள், பதினேழு அருவிகள், ஜொல்மோலுங்மா சிகரம், பெர்மூடா, வெங்கல பறவைகள், ஓமெய் மலை, புத்த மதக் கோயில் என்று சீனாவிலுள்ள இடங்களை நேரில் சென்று பார்த்ததை போன்று புத்தகத்தில் தொகுத்து வழங்கியமைக்கு சீன வானொலிக்கு நன்றி.
மின்னஞ்சல் பகுதி சிறுநாயக்கன்பட்டி, கே.வேலுச்சாமி மார் 3ம் நாளன்றைய செய்தித்தொகுப்பினை கேட்டேன். சர்வதேச சமூகம் தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து கொண்டிருக்கும் இவ்வேளையில் சீன அரசு பொருளாதார நெருக்கடியினை சமாளிக்க சுமார் 4 லட்சம் கோடி யுவான் மதிப்புள்ள பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை வகுத்து இருப்பதன் மூலமாக வருகின்ற ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி சுமார் 8 விழுக்கடாக அமையும், மேலும் கிராமப்புறங்களில் சுமார் 90 லட்சம் பேர் வேலை வாய்ப்பினை பெறுவார்கள் என்பது நூற்றுக்கு நூறு உண்மையாக மாறும் என்பது நமது நம்பிக்கை. விஜயமங்கலம், குணசீலன் அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றக் கருத்தரங்கின் ஒலிப்பதிவை கேட்டேன். அதில், நம்முடைய மொழியை எவ்வாறு காக்கவேண்டும், தாய்மொழியை எவ்வாறு நேசிக்க வேண்டும் என்பதை முனைவர் சிவகுமார் அவர்கள் மிக விரிவாக விளக்கினார். ஒரு நாட்டை பிளவு படுத்த வேண்டுமானால் மக்களை அழிக்க வேண்டியதில்லை, அந்த நாட்டின் மொழியை அழித்தாலே போதும் அந்த நாடு தானாகவே அழிந்து விடும் என்று அவர் கூறியது உண்மைதான். ……பேளுக்குறிச்சி க.செந்தில்…… மார்ச் முதல் நாளன்று மலர்சோலை நிகழ்ச்சியில் ஆஸ்கார் விருது பற்றிய தகவல்களை அறிந்து கொண்டேன். ஆஸ்கார் விருது பற்றிய அதிக தகவல்களை தந்த திரு தமிழன்பன் மற்றும் திரு கடிகாசலம் அவர்கள் இருவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1 2 3
|