• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-09 10:18:01    
பனி விழா

cri
பனி விழா

குளிர் அதிகமான நாடுகளில் பனிப் பொழிவு மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது. பனியை மையமாக கொண்டே பனி சறுக்கு, பனி ஹாக்கி போன்ற பல்வகை விளையாட்டுக்கள், கண்காட்சிகள், சிறப்பு சுற்றுலா நடவடிக்கைகள் நடத்தப்படுவதுண்டு. சீனாவின் Heilongjiang மாநிலத்தின் தலைநகரான Harbin இப்படிப்பட்ட மிக குளிரான இடங்களில் ஒன்று. சைபீரியாவின் அருகில் அமைந்துள்ள இது, குளிர் காலத்தில் பூஜியத்திற்கு கீழ் 35 டிகிரி செல்சியஸ் வரை அதிக குளிராக இருக்கக்கூடியது. இங்கு ஒவ்வோர் ஆண்டும் பனி விழா கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் காலநிலை மாற்றம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புக்களால் தற்போது பனி விரைவாக கரைந்து விடுகின்றது. எனவே தற்போதைய கண்காட்சிகளில் வைக்கப்படும் சிலைகள் பனிக்கட்டியால் செயற்கையாக செய்யப்படுகின்றன. அதாவது பனிச் சிலைகள் உருகி போய்விடாமல் இருக்க பூஜியத்திற்கு கீழான தட்பவெப்ப நிலையை செயற்கையாக அளிக்கின்றார்கள். வழக்கமாக டிசம்பர் பாதியில் தொடங்கும் இப்பனி விழா பெப்ரவரி தொடக்கம் வரை நடத்தப்படுகிறது. இவ்வாண்டு டிசம்பர் பாதியில் தொடங்கிய பனி விழாவில் காணப்பட்ட சிறப்பம்சம் அனைவராலும் பாராட்டப்பட்டது. அது மிக பெரிதாக, பிரமாண்டமாக செதுக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் தாத்தா பனிச் சிலையாகும். தரையிலான பனியில் செதுக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் தாத்தா சிலை 160 மீட்டர் அதாவது 525 அடி நீளத்திலும், 24 மீட்டர் உயரத்திலும் சிறந்த கலையம்சங்களோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுமார் எட்டு இலட்சம் பேர் இந்த பனி விழாவில் கலந்து கொள்வர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

1 2 3