|
தைவான் மீதான Tang Shubei என்பவரின் அன்புணர்வு
cri
|
 1993ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் நாள் முற்பகல், தைவான் நீரிணை இருகரை உறவுச் சங்கத் தலைவர் Wang Daohan தைவான் நீரிணை தொடர்பு நிதியத்தின் தலைமை இயக்குநர் Gu Zhenfuவுடன் சிங்கப்பூரில் முதல் முறையாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தை மக்கள் அனைவரது பாராட்டையும் பெற்றது. இப்பேச்சுவார்த்தையை இருகரை உறவின் இணக்கத்துக்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றமாகும் என வெளிநாட்டுச் செய்தி ஊடகங்கள் மதிப்பிட்டன. Tang Shubeiயும் இப்பேச்சுவார்த்தையை வெகுவாக பாராட்டினார். ஆனால் இப்பேச்சுவார்த்தைக்காக தாம் செய்த உணர்வுப்பூர்வமான ஏற்பாடுகளை அவர் அதிகமாகக் குறிப்பிடவில்லை. தைவான் நீரிணை இருகரை உறவுச் சங்கத்தின் நிரந்தர துணைத் தலைவரான Tang Shubei தான், பேச்சுவார்த்தை நடைபெறும் முன், தைவான் நீரிணை தொடர்பு நிதியத்துடன் முன்னேற்பாட்டுத் தன்மையுடைய கலந்தாய்வுகளை நடத்தி, Wang Daohan-Gu Zhenfu பேச்சுவார்த்தை தடையின்றி நடைபெறுவற்கு சிறந்த நிலையை உருவாக்கினார். பேச்சுவார்த்தையின் போது, தைவானுடன் அப்போது ஒத்த கருத்துக்கு வர முடியாத பிரச்சினை தொடர்பாக அவர் இரண்டு நாட்கள் இணக்க முயற்சிகளைச் செய்தார். இறுதியில் 4 உடன்படிக்கைகள் உருவாக்கப்பட்டன. 1 2 3
|
|