
பண்டைய சீனாவில், மக்கள் திருமணம் செய்ய தகுந்த ஆண் அல்லது பெண்ணை தெரிவு செய்ய பெரிதும் உதவியவர் பொருத்தம் பார்த்து உதவும் திருமணத் தரகர்தான். ஆக அக்காலத்தில் திருமணத் தரகர் ஒருவரின் உதவியோடும்,பெற்றோரின் ஏற்பாடோடும்தான் மக்கள் தங்களது இணையை தேடி, இல்லறத்தில் நுழைந்தனர். நம்மூரில் பெண் பார்க்கும் படலம் இன்றும் இருப்பது போலத்தான், அப்போது சீனாவில் மணமகன் வீட்டார் மணப்பெண்ணை பார்க்க குடும்பத்தோடு பெண்ணின் வீட்டுக்கு சென்றனர். சென்று பெண்ணின் வீட்டாரோடு கலந்துபேசி தங்களது முடிவை, எண்ணத்தை பெற்றோர் உறுதிசெய்தனர். இந்த வழக்கத்திற்கு பெயர் ஷியாங்ச்சின், அதாவது எண்ணத்தை, மனப்பாங்கை உறுதிசெய்தல் என்று பொருள். 1 2 3
|