 தற்போது, எமது கிராமப்புறங்களில் ஒவ்வொரு குடும்பங்களும், வேளாண் இயந்திர கருவிகளை பயன்படுத்தி வருகின்றன. அவை, எமது பணிப் பயனையும், தானியங்களின் விளைச்சலையும் பெரிதும் அதிகரித்து வருகின்றன. எமது வருமானமும் உயர்ந்துள்ளது. எனது ஆண்டு சராசரி வருமானம் 30 ஆயிரம் யுவானுக்கு மேலாகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முந்தைய வருமானத்தை விட, இது, 3 மடங்கு அதிகரித்துள்ளது என்று Cedai Phuntsok கூறினார்.
தானியங்களின் விளைச்சலைப் பெரிதும் உயர்த்தி, தானிய உணவு எண்ணெயின் உற்பத்தி நிலையின் உயர்வையும் மொத்த விளைச்சலின் நிதானத்தையும் உத்தரவாதம் செய்வதோடு, வேளாண் மற்றும் கால் நடை வளர்ப்பு துறையின் தனிச்சிறப்பு வாய்ந்த தொழிற்துறையை திபெத் தன்னாட்சிப் பிரதேசம், பெரிதும் வளர்த்துள்ளது. தவிர, கிராமப்புறங்களிலான சுற்றுலாத் துறை, சிறுபான்மைத் தேசிய இன கைவினைத் தொழில்கள் உள்ளிட்ட வேளாண் சாரா தொழிற்துறைகள் பெரிதும் வளர்க்கப்பட்டுள்ளன. 2007ம் ஆண்டு, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் நபர்வாரி நிகர வருமானம், 2788 யுவானை எட்டியது. இது தொடர்ந்து ஐந்து ஆண்டுகாலம் 10 விழுக்காட்டுக்கு மேலான வளர்ச்சியை நிலைநிறுத்தியது.
1 2 3
|