
திபெத்தில் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை நிலைமையை முழுவதும் மேம்படுத்துவதற்காக, அவர்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்துவது, வருமானத்தை அதிகரிப்பது ஆகியவை, திபெத் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் முதன்மை கடமையாக இருக்கும் என்ற தீர்மானத்தை சீன அரசு நிறைவேற்றியுள்ளது. 2006ம் ஆண்டு முதல், 5 இலட்சத்து 70 ஆயிரம் விவசாயிகள் மற்றும் ஆயர்கள், குடிநீர், மின்சாரம், போக்குவரத்து முதலிய வசதிகளைக் கொண்ட புதிய வீடுகளில் குடிபெயர்ந்துள்ளனர். மீத்தேன் வாயு உள்ளிட்ட தூய்மையான, பசுமையான எரியாற்றலை அவர்கள் பயன்படுத்துகின்றனர். மருத்துவச் சிகிச்சை இலவசமாகப் பெறுவதை அடிப்படையாகக் கொண்ட திபெத் வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்புப் பிரதேசத்தில் மருத்துவச் சிகிச்சை பற்றிய ஒத்துழைப்பு அமைப்பு முறை பன்முகங்களிலும் செயல்படுத்தியுள்ளமை, பரந்துப்பட விவசாயிகள் மற்றும் ஆயர்கள் மருத்துவச் சிகிச்சை பெறுவதிலான சுமையைக் குறைத்துள்ளது.
இது வரை, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள அனைத்து விவசாயிகள் மற்றும் ஆயர்களும் இந்த மருத்துவச் சிகிச்சை பற்றிய ஒத்துழைப்பு அமைப்பு முறையினால் ஏற்பட்டுள்ள நலனை அனுபவித்து வருகின்றனர் என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சுகாதாரப் பணியகத்தின் அடி மட்ட நிலை சுகாதார அலுவலகத்தின் தலைவர் Wang Jianpeng கூறினார். 1 2 3
|