கடந்த ஆண்டு மே 12ஆம் நாள் சீனாவின் தென் மேற்கு பகுதியிலுள்ள சிச்சுவான் மாநிலத்தில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்தினால், அங்குள்ள மக்கள் வீடுகளையும் குழந்தைகள் பள்ளிக்கூடங்களையும் இழந்தனர். ஓராண்டு காலத்துக்குப் பின், தற்காலிக பள்ளிகளிலும் மறுசீரமைக்கப்பட்ட பள்ளிகளிலும் மாணவர்கள் பாடம் படிக்கும் குரலொலி மீண்டும் கேட்பதையும் மாணவர்களின் முகங்களில் மீண்டும் புன்னகை மலர்ந்திருப்பதையும் எமது செய்தியாளர்கள் கவனித்தனர்.
பெய் ச்சுவான் இடை நிலைப் பள்ளி, மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட மியன் யாங் நகரில் அமைந்துள்ளது. நிலநடுக்கம் நிகழ்ந்ததற்குப் பிந்தைய 7வது நாளில், பெய் ச்சுவான் இடை நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் அருகிலுள்ள ஒரு பயிற்சி மையத்துக்கு இடம்பெயர்க்கப்பட்டனர். அவர்களது படிப்பும் மீட்கப்பட்டது. இப்பள்ளியின் பொறுப்பாளர் Li Xueyi பேசுகையில், கடந்த ஆண்டு செப்டெம்பர் திங்கள், பெய்ஜிங் தலைநகர் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தின் இசைக் கல்லூரியைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள், கல்வித் தரத்தின் உயர்வுக்காக பெய் ச்சுவான் இடை நிலைப் பள்ளிக்கு வந்து உதவியளித்தனர் என்று கூறினார். பின்னர், மாணவர்களின் உளநல மேம்பாட்டுக்காக, இசை, நுண்கலை உள்ளிட்ட கலைப் பாடங்களை இப்பள்ளி அதிகரித்தது.
"கலைக் கல்வியானது, தற்போது நாங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியாகும். தலைநகர் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தின் இசைக் கல்லூரியின் ஆசிரியர் மூல வளத்தை இதில் முழுமையாக பயன்படுத்துகின்றோம். எங்கள் சிறப்பு கலை வகுப்புகள், மாணவர்களின் கலை ஆர்வத்தை வளர்ப்பது மற்றும் கலைப் பொருட்கள் பற்றி தகுந்த மதிப்பீடு செய்வதற்கு உதவுவது தவிர, அவர்களது சிறப்புத் திறனுக்கும் பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வுக்கான திட்டத்துக்கும் இணங்க நடத்தப்படுகின்றன" என்று Li Xueyi குறிப்பிட்டார்.
நிலநடுக்கத்தில் பெய் ச்சுவான் இடை நிலைப் பள்ளியின் மாணவர்கள் பலர் காயமுற்று உடல் திறன் சவால் கொண்டோராக மாறினர். ஆனால், இசை, நுண்கலை உள்ளிட்ட கலைப் பாடங்களால், அவர்கள் படிப்படியாக தங்களது இழப்பு மற்றும் வேதனையிலிருந்து மீண்டனர்.
பெய் ச்சுவான் இடை நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் பெய்ஜிங் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தின் 3வது ஆண்டு மாணவி Zhang Zhujun செய்தியாளரிடம் பேசுகையில், இசை மூலம் பாதிக்கப்பட்ட இடங்களைச் சேர்ந்த அனைத்து குழந்தைகளுக்கும் மீண்டும் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் கிடைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
"எங்கள் வயது இங்குள்ள மாணவர்களின் வயதை விட 3, 4 ஆண்டுகள் அதிகம். முன்பு கல்வி பயின்ற போது, இசை, நமது உணர்வை வெளிப்படுத்தும் முறை என்று மட்டுமே கருதினேன். இங்கே வந்த பின், நாம் இசை மூலம் இணைக்கப்பட்டுள்ளோம் என்று உணர்கின்றேன்" என்று Zhang Zhujun கூறினார்.
கடும் நிலநடுக்கத்தில், சிச்சுவான் மாநிலத்தில் 13 ஆயிரத்துக்கு அதிகமான பள்ளிகள் வெவ்வேறான அளவில் பாதிக்கப்பட்டன. ஆனால் ஓராண்டு காலத்தில், உள்ளூர் கல்வி இலட்சியம், வியக்கத்தக்க வேகத்தில் மீட்கப்பட்டு வருகிறது. 4 திங்களுக்குள் பாதிக்கப்பட்ட இடங்களிலுள்ள அனைத்து பள்ளிகளும் மரப் பலகைகளால் உருவான அறைகளில் அல்லது செப்பனிடப்பட்ட வகுப்பறைகளில் பாடம் சொல்லிக் கொடுக்க துவங்கின. மனவியல் ஆற்றுப்படுத்தல் மற்றும் உள நலம், முறையான பாடங்களில் சேர்க்கப்பட்டது. திட்டப்படி, இவ்வாண்டு செப்டெம்பர் முதல் நாளுக்கு முன், பெரும்பாலான பள்ளிகள் நிரந்தர கட்டிடங்களில் செயல்படத் துவங்கும்.
1 2 3
|