• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-08 12:04:16    
சிச்சுவானிலுள்ள பள்ளிக் கூடங்களின் மறுசீரமைப்பு

cri

தீவிரமான கட்டுமானத்திலுள்ள புதிய பள்ளிக்கூடத் திட்டப்பணிகள் பலவற்றை எமது செய்தியாளர் கண்டறிந்தார். Du Jiang Yan நகரின் வட கிழக்கு பகுதியிலுள்ள Xiang E துவக்கப் பள்ளியின் மறுசீரமைப்புத் திட்டப்பணி இவற்றில் ஒன்றாகும்.

கட்டுமானத்திலுள்ள Xiang E துவக்கப் பள்ளி, சீனாவில் முதலாவது முழு மரக் கட்டமைப்பு கொண்ட பள்ளியாகும். இதிலுள்ள மரத்துண்டுகள் அனைத்தும் கனடாவினால் கொடையாக வழங்கப்பட்டன. Xiang E துவக்கப் பள்ளியின் கட்டிட பரப்பளவு 5000 சதுர மீட்டராகும். ஒட்டுமொத்த கல்விக் கட்டிடம், மாணவர் விடுதி, உணவு விடுதி, விளையாட்டுத் திடல் முதலியவை அதில் அடங்கும். இக்கட்டிடங்கள் கட்டிமுடிக்கப்பட்ட பின், ஒரே நேரத்தில் 540 மாணவர்கள் இங்கே கல்வி பயில முடியும். சிச்சுவான் மாநிலத்தின் Du Jiang Yan நகர கல்விப் பணியகத்தின் மறுசீரமைப்புத் திட்டப்பணிக்கான பொறுப்பாளர் Zhang Ping பேசுகையில், Xiang E துவக்கப் பள்ளியின் நிலநடுக்கத் தடுப்பு ஆற்றல், சீனாவின் ஆக்கப்பணி கட்டிடத்துக்கான மிக உயர் வரையறையை எட்டியுள்ளது என்று கூறினார். அவர் மேலும் கூறியதாவது—

"கட்டுமான அமைச்சகத்தின் சிறப்பு தரக் கட்டுப்பாட்டு வரையறையின்படி இத்துவக்கப் பள்ளி கட்டியமைக்கப்படுகிறது. நிலநடுக்கத்துக்குப் பின், Du Jiang Yan நகரத்தின் நிலநடுக்கத் தடுப்பு ஆற்றல் 8 புள்ளிகள் ஆகும். பொது நல வசதிகளைப் பொறுத்த வரை, இந்த அடிப்படையில் மேலும் 1 புள்ளி அதிகரிக்க வேண்டும். எனவே இப்பள்ளியின் நிலநடுக்கத் தடுப்பு ஆற்றல் 9 புள்ளிகள் ஆகும். இப்பள்ளியின் வடிவமைப்பு, நிலவியல் ஆய்வு, கண்காணிப்பு மற்றும் நிர்வாகம், தரச் சோதனை ஆகியவை, கட்டுமான ஒழுங்கு முறையின்படி நடைபெற்று வருகின்றன. கட்டுமானத் தரத்தையும் வேகத்தையும் கண்காணிக்கும் பொருட்டு, சிறப்புக் குழுக்களை உருவாக்கியுள்ளோம்" என்று அவர் விளக்கினார்.

Xiang E துவக்கப் பள்ளியின் கட்டுமானப் போக்கில், உயர் அறிவியல் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்பள்ளியின் கட்டுமானத்துக்குப் பொறுப்பான பொறியியலாளர் Yang Jiancheng கூறியதாவது—

"மரக் கட்டமைப்பு, நிலநடுக்கத்தைத் தடுக்கும் திறன் மிக்கது. எரியாற்றலை சிக்கனப்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு துணை புரியும். மரச் சுவரின் வெளிப்புறத்தில் 3 சென்டி மீட்டர் கனமுடைய தீத் தடுப்பு ஜிப்சம் பலகை ஒட்டப்படுகிறது. கூரையிலுள்ள குழாய்கள் தீத் தடுப்புக்கான நீர் தெளிப்பு கருவிகளாகும். தவிரவும், இரண்டு பல்லூடக வகுப்பறைகளும் சிறப்பு வகுப்பறைகளும் இப்பள்ளியில் அதிகரிக்கப்படுகின்றன" என்றார் அவர்.

1 2 3