ஷாங்ஷி வங்கித்தொழில் வணிகர்கள்

இந்தியாவில் வங்கிகளின் வரலாற்றை அலசிப்பார்த்தால் 18ம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி, 19ம் நூற்றாண்டின் 60ம் ஆண்டுகளின் இறுதி வரை ஐரோப்பியர்களை பங்குதாரர்களாக கொண்டதாகவே வங்கிகள் வளரத்தொடங்கின. இருபதால் நூற்றாண்டின் மையப்பகுதியில்தான் வங்கிகளின் நாட்டுடைமையாக்கம் நடைமுறைக்கு வந்தது. இன்றைக்கு தனியார் வங்கிகள், அரசுடைமையாக்க வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள் என வகை வகையாக வங்கிகள் உள்ளன.
சீனாவில் புகழ்பெற்ற வணிகர்களை பற்றி ஆய்வு செய்கையில் ஷாங்ஷியை சேர்ந்த வங்கித்தொழில் வணிகர்கள் முக்கியமாக குறிப்பிடப்படவேண்டியவர்கள். ஒரு காலத்தில் பொருட்களை வண்டியிலேற்றி வடக்குக்கும் தெற்குக்குமிடையே பயணித்து விற்பனை செய்த ஷாங்ஷி வணிகக்குழுவினர், பின்னாளில் நாடுமுழுதும், ஏன் ரஷயாவுக்குமே கூட பொருட்களை கொண்டு சென்று விற்பனை செய்து பிரபலமடைந்தனர். ஆனால் ஷாங்ஷி வணிகர்களுக்கு நிலையாத புகழை பெற்றுத் தந்தது அவர்கள் மேற்கொண்ட வங்கித்தொழில்தான். 19ம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே இவர்கள் பண வைப்புச்சேவையை அதாவது மக்கள் தங்களது பணத்தை இவர்களிடம் கொடுத்து பாதுகாப்பாக சேமித்து வைக்கக்கூடிய சேவையை வழங்கத் தொடங்கினார்களாம்.
1 2 3
|