• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-12 18:38:52    
ஷாங்ஷி வங்கித்தொழில் வணிகர்கள்

cri

எப்படி இந்த பண வைப்பு மற்றும் வங்கிச் சேவை துவங்கியது என்பதற்கு சில கதை போன்ற சம்பவங்கள் கூறப்படுவதுண்டு. 1810ம் ஆண்டு வாக்கில் ஷான்ஷியில் ஒரு வண்ண மற்றும் சாய வணிகர் சீனாவின் முதல் பியாவ்ஹாவ் அதாவது வங்கி நிறுவனத்தை துவக்கினாராம். அதாவது நீண்டதூரம் பயணம் செய்யும் வணிகர்கள் போகும் வழியில் தங்களது பணத்தை, மடியில் கணம் வழியில் பயம் என்று நொந்துகொண்டே சொல்லாமல், சஞ்சலமின்றி பயணம் செய்ய, இந்த பியாவ்ஹாவ், வரைவோலையை வழங்கியது. பணத்தை இங்கே செலுத்தி வரைவோலையை வாங்கிக்கொண்டால், அவர் செல்லுமிடத்திலுள்ள இந்த பியாவ்ஹாவின் கிளை அலுவலகத்தில் வரைவோலையை ஒப்படைத்து தனது பணத்தை அவர் பெற்றுக்கொள்ள முடியும். எடையும், அளவில் அதிகமாகவும் இருந்த நாணயங்களை, காசுகளை சுமந்து செல்லாமல், எளிதான ஒரு தாளை, வரைவோலையை கொண்டு சென்று வணிகம் செய்ய யாருக்குத்தான் பிடிக்காமல் போகும். ஆக இந்த பியாவ்ஹாவின் வரைவோலைச் சேவை மக்களிடையே, குறிப்பாக வணிகர்களிடையே வரவேற்பும், மதிப்பும் பெறத்தொடங்க, 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வாக்கில் ஷான்ஷியின் மூன்று வட்டத்தைச் சேர்ந்த டசன் கணக்கிலான பியாவ்ஹாவ் எனும் வங்கிகள் சீனாவின் முக்கிய நகரங்களில் கிளை அலுவலகங்களை துவக்கின. தொலைதூர சிறிய நகரான ஷான்ஷியின் பிங்யாவ், பண வைப்பின் தேசிய நிதி மையமாக மாறியது. ஷான்ஷி வணிகர்கள் வங்கித்தொழிலை வளைத்து பிடித்து, ஆதிக்கம் செலுத்தினர்.

காலப்போக்கில் ஷான்ஷி வங்கித்தொழில் வணிகர்கள் ஜப்பான், கொரியாவிலும் தொழில் செய்யத் தொடங்கினர். 1911ம் ஆண்டில் ச்சிங் வம்சத்தின் இறுதி வரை அதாவது கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் சீனாவின் பண மாற்ற வணிகத்தின், நாணய இடமாற்றத் தொழிலின் வல்லவர்களாக, கோலோச்சினர். அடுத்து நாம் பார்க்கப்போகும் ஹுய் வணிகர்களை விட மிக முன்னதாக புகழ் பெற்று விளங்கியவர்கள், வங்கித்தொழிலின் முன்னோடிகளான ஷான்ஷி வணிகர்களே.

1 2 3