 சீன மற்றும் எத்தியோபிய கல்வி துறைகள் அண்மையில் உடன்படிக்கை ஒன்றை உருவாக்கின. அதன் படி, சீனத் தரப்பின் உதவியில் எத்தியாபியாவில் ஒரு தொழில் நுட்ப கல்லூரி நிறுபப்படும். சீனா வெளிநாடுகளின் கல்வி துறையுடன் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய திட்டப்பணி இதுவாகும். இவ்வாண்டு இது அதிகாரப்பூர்வமாக துவங்கப்படும். எத்தியோபியாவுக்கு பல துறைகளைச் சேர்ந்த திறமைசாலிகளை அது வளர்க்கும்.
2008ம் ஆண்டு டிசம்பர் 24ம் நாள், எத்தியாபிய-சீனத் தொழில் நுட்பக் கல்லூரியைக் கூட்டாக இயக்குவது பற்றிய உடன்படிக்கையில், சீனத் துணை கல்வித் துறை அமைச்சர் zhang xin zhangஉம், எத்தியோபிய கல்வி துறை அமைச்சர் Wondwossen Kifluஉம் கையோப்பமிட்டனர்.
சீனாவுடன் சேர்ந்து ஒரு தொழில் நுட்பக் கல்லூரியை நடத்தும் முன்மொழிவை 2007ம் ஆண்டு, எத்தியோபிய தரப்பு முன்வைத்தது. சீனாவின் கல்வி வழிமுறையில் இக்கல்லூரியை இயக்க வேண்டும் என்று எத்தியோபியத் தரப்பு விருப்பம் தெரிவித்தது. தொழில் நுட்பக் கல்லூரியை நடத்துவது பற்றிய பயனுள்ள அனுபவங்களை எத்தியோபியா உள்ளிட்ட இதர நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள சீனா விரும்புகின்றது என்று சீனத் துணை கல்வித் துறை அமைச்சர் zhang xin zhang தெரிவித்தார். அவர் கூறியதாவது
வெளிநாடுகளுக்கு உதவி அளிப்பது பற்றி தனிச்சிறப்புடைய கோட்பாட்டை சீனா மேற்கொள்கின்றது. அதாவது, உதவி செய்வதுன், நலன் பெறுவதற்கான வழிமுறைகளையும் வழங்குவதாகும். எத்தியோபிய மற்றும் ஆப்பிரிக்க மக்களை உண்மையாக உதவி செய்து தொழில் நுட்பக் கல்லூரியை நடத்தும் வழிமுறைகளையும் அவர்களுக்கு தரும் என்றார் அவர்.
1 2 3
|