• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-12 18:40:02    
எத்தியோபியாவில் சீனாவின் உதவியுடன் நிறுவப்பட்ட தொழில் நுட்ப கல்லூரி

cri

எத்தியோபியாவின் தலைநகர் அதிஸ்அபாபாவில் அக்கல்லூரி கட்டியமைக்கப்படும். ஒரு இலட்சத்து 10 ஆயிரம் சதுர மீட்டருக்கு அதிகமான நிலப்பரப்புடைய அக்கலூரியில், 14 கட்டிடங்கள் அமையும். கல்லூரியின் நிர்வாக மற்றும் கல்விப் பணியைத் துவக்க, சீனா தொடர்புடைய நிபுணர்களையும் ஆசிரியர்களையும் அனுப்பியுள்ளது.

உதவி திட்டப்பணியை மேற்கொள்ளும் போது, ஒரு முக்கிய கோட்பாட்டில் சீனத் தரப்பு கடைப்பிடிக்கின்றது என்று சீனத் துணை கல்வித் துறை அமைச்சர் zhang xin zhang கூறினார். சீனாவின் வெற்றிகரமான அனுபவங்களைத்தவிர, எத்தியோபியா மற்றும் ஆப்பிரிக்காவின் நடைமுறை நிலைமையின் படி, உள்ளூர் சமூக மற்றும் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு, இரு தரப்புகளின் கூட்டு முயற்சி மூலம் ஆப்பிரிக்க மக்களின் தொழில் நுட்பக் கல்லூரியை நடத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

எத்தியோபிய கல்வி துறை அமைச்சர் Wondwossen Kiflu அக்கல்லூரியின் முக்கியத்துவத்தை உயர்வாக மதிப்பிட்டார். அவர் கூறியதாவது

உயர் தர தொழில் நுட்பப் பணியாளர்களை இந்தக் கல்லூரி வளர்க்கலாம். எத்தியோபியத் தொழில் துறை மற்றும் எத்தியோபியாவில் முதலீடு செய்யும் சீனத் தொழில் நிறுவனங்களின் தேவையை அவர்கள் நிறைவேற்றுவர் என்றார் அவர்.

எத்தியோபியாவில், 80 விழுக்காட்டு மக்கள் தொழில் நுட்பக் கல்வியைப் பெற்றுக்கொள்கின்றனர். அந்த ஒத்துழைப்புத் திட்டப்பணி மூலம், சீனா வழங்கிய திறமைசாலி பயிற்சி மற்றும் தொழில் நுட்பங்களிலிருந்து எத்தியோபியா நன்மை பெறும் என்று Wondwossen Kiflu கூறினார். தொழில் நுட்பக் கல்லூரியை நடத்துவதைத் தவிர, சீனா எத்தியோபிய ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் என்று அவர் தெரிவித்தார். தற்போது, சுமார் 40 எத்தியோபிய ஆசிரியர்கள் சீன தியேன் ச்சின் பொறியியல் கல்லூரியில் பயிற்சியை பெறுகின்றனர் என்று தெரிகின்றது.

தியேன் ச்சின் பொறியியல் கல்லூரியின் வேந்தர் Meng guo qing எமது செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது, எத்தியோபிய மாணவர்களின் கல்வி பதிவுக்கு மன நிறைமை தெரிவித்தார். அவர் கூறியதாவது

எமது கல்லூரியில் கல்வி பயிற்சி பெற்ற எத்தியோபிய மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை மிகவும் பேணிமதிக்கின்றனர். எனென்றால், சீன அரசு அவர்களுக்கு கல்வி மானியம் வழங்கியது என்றார் அவர்.

அந்த மாணவர்கள் நாட்டுத் திரும்பிய பிறகு, எத்தியோபிய-சீனத் தொழில் நுட்பக் கல்லூரியில் தாம் பயின்ற அறிவுகளை வெளிப்படுத்தி, திறமையாலிகளுக்கு பயிற்சி அளிக்கும் அனுபவங்களை பெறுவர் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

1 2 3