• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-14 16:08:57    
திபெத்தின மக்களின் அன்றாட வ்ழ்க்கை நிகழ்வுகள் மூலம் திபெத்தின் மாற்றங்கள்

cri

ஆய்வாளர் ஆன் ஆன் ஸாய் தான் நமது நேயர்களுக்கு வணக்கம் சொல்லி நேர்காணலை துவக்குகிறார். அவர் சில அன்றாட வாழ்க்கை விடயங்களை எடுத்துக்காட்டாக கூறி திபெத் மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை அறிமுகப்படுத்துகிறார்.

திபெத்தின மக்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன என்று கிளீடஸ் கேட்டார்.

இது பற்றி திபெத்தின மக்கள் நாள்தோறும் புத்தமத வழிபாடு செய்ய பயன்படுத்தும் கருவி பற்றி ஆராய்கின்ற ஆன் ஸாய் தான் பழைய வழிப்பாட்டிற்கும் இன்றைய வழிபாட்டிற்கும் இடையிலான வேற்றுமையை ஒப்பிட்டு விளக்கிக் கூறுகிறார். அவர் கூறியதாவது

திபெத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி யார் தெளிவாக விளக்க முடியும்? அதை பற்றி விளக்க இரண்டு வகை மக்களுக்குதான் உரிமை உண்டு. அவர்கள் திபெத்தின் மாற்றங்களை கண்ட முதியோர்களும் திபெத்தின் வளர்ச்சியை தத்துவ ரீதியில் நீண்டகாலமாக ஆராயும் நிபுணர்களும் ஆவர். புத்தமத வழிபாடு திபெத்தின மக்களின் வாழ்க்கையில் முக்கிய பகுதியாக கருதப்படுகின்றது. சாதாரண மற்றும் உயர் குடி மக்களிடம் இந்த நம்பிக்கையில் கருத்து வேற்றுமையே இல்லை. புத்தமதம் வழிபாடு செய்வது அவர்களின் மத நம்பிக்கை மிகுந்த வாழ்க்கையில் உயிர்துடிப்பாற்றலாக திகழ்கின்றது. சாதாரண குடும்பத்தில் முக்கிய விடயங்கள் நடக்க இருக்கின்ற போது அவை நல்ல முறையில் நடக்க மங்களம் வேண்டிகொள்ளும் போது புத்தமதக் கோயிலுக்கு செல்வர் விழா கொண்டாடும் போது கோயிலுக்கு சென்று வேண்டி கொள்வர் அப்போது அவர்கள் கையில் எடுத்துச் செல்லும் புனித கருவி புத்தமதத் திருமறை ஓதும் கருவியென அழைக்கப்படுகின்றன. இந்த கருவியின் மாற்றம் பற்றி ஆய்வாளர் ஆன் ஸாய் தான் அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் எடுத்துக் காட்டுகளில் ஒன்றை எங்கள் செய்தியாளர்களுக்கு விளக்கிக் கூறுகின்றார். அவர் கூறியதாவது

இப்போது லாசா நகரின் சாலைகளிலும் தாச்சோ கோயிலிலும் வழிபாடு செய்யும் திபெத்தின மக்களின் கைகளில் வெள்ளி அல்லது தங்கத்தால் செய்யப்பட்ட புத்தமத திருமறை ஓதும் கருவிகள் இருக்கின்றன. இந்த கருவி சாதாரண மக்களின் வாழ்க்கையுடன் மிகவும் தொடர்புடையது. இத்தகைய தரமான கருவிகளை முன்பு பண்ணை உரிமையாளர்களும் உயர் நிலை பிரபுக்களும் மட்டுமே பயன்படுத்தினர். அப்போதைய கருவிகள் வெள்ளி கலந்த உலோகத்தால் தயாரிக்கப்பட்டவை. இப்போது சாதாரண திபெத் மக்களும் பயன்படுத்தும் புத்தமதத் திருமறை ஓதும் கருவி மிகவும் தரமானது. அதுவும் திபெத்தின மக்களின் வாழ்க்கையில் முக்கிய மாற்றங்களை உறுதிப்படுத்தும் சாட்சிகளில் ஒன்றாக கருதப்படுகின்றது.

1 2 3