• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-14 16:08:57    
திபெத்தின மக்களின் அன்றாட வ்ழ்க்கை நிகழ்வுகள் மூலம் திபெத்தின் மாற்றங்கள்

cri

புத்தமதம் வழிபாடு செய்வது திபெத்தின மக்களின் வாழ்க்கையில் முக்கிய அம்சமாகும். பூசை செய்வது மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பகுதியாகும். கடவுள் சிலை, கைவினைப் பொருட்கள் பூசையறையில் அல்லது பூசை மேசையின் மேல் வைக்கப்பட்டு இறைவேண்டல் செய்யப்படுகின்றது. திபெத் விடுதலை பெற்றதுக்கு முன் இந்த பூசையறை சாதாரண மக்களின் வீட்டில் இருக்கவில்லை. இது நடுத்தர மற்றும் உயர் நிலை பண்ணை உரிமையாளர்களின் வீடுகளில் மட்டுமே காணப்பட்டது. இது பற்றி ஆய்வாளர் ஆன் ஸாய் தான் கூறியதாவது.

இப்போது திபெத்தில் சாதாரண விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வீடுகளில் பூசையறை அல்லது பூசை மேசை ஒதுக்கப்படுகின்றன. அதன் அளவு மற்றும் தரம் முன்பு பண்ணை உரிமையாளர்களின் குடும்பங்களில் பொருத்தப்பட்டதை விட கம்பீரமானவை. கல் பீடம் மேசையாகவோ அல்லது பெரிய அறை பூசைக்காகவோ பயன்படுத்தப்படுகின்றது என்று ஆய்வாளர் ஆன் ஸாய் தான் திபெத்தின மக்கள் தேவனை வழிபடும் பூசையறை அல்லது மேசை பற்றி விளக்கி கூறும் போது வர்ணிக்கிறார்.

அடுத்து திபெத் மக்களின் புத்தமத நம்பிக்கையில் அன்றாட நிகழ்வுகளில் ஏற்பட்ட மாற்றங்களை அறிந்த பின் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட முக்கிய அனுபவங்களை பார்க்கின்றோம்.  

காலணி செருப்பு ஆகியவை எங்கள் வாழ்க்கையில் இன்றியமையாத பொருட்களாகும். ஆனால் விடுதலை பெறுவதற்கு முன் திபெத்தின மக்களின் வாழ்க்கையில் இவை ஆடம்பர பொருட்களாக கருதப்பட்டன. இது பற்றி ஆய்வாளர் ஆன் ஸாய் தான் கூறியதாவது.

எங்கள் வாழ்க்கையில் காலணிகள் சாதாரண பொருட்களாகும். ஆனால் விடுதலை பெறுவதற்கு முந்திய திபெத்தில் பண்ணை அடிமைகள் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் குடும்பங்கங்களில் காலணிகள் ஆடம்பர பொருட்களாக கருதப்பட்டன. வறிய குடும்பங்களில் 7 பேர் ஓர் இணை காலணியை அணிந்தனர். யார் சம்பாதிக்க வேண்டி உழைக்க செல்கிறாரோ அவர் இந்த காலணிகளை போட்டு வெளியே சென்றார். குடும்பத்திலுள்ள ஏனையோர் வீ்ட்டிலே காலணிகள் அணியாமலே இருந்தனர். இப்போது திபெத்தின மக்களின் வாழ்க்கையில் தலைகீழான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு திபெத்தின குடும்பத்திலும் காலணிகள் ஒதுக்கி வைக்கப்படும் பெட்டி வீட்டின் முன்னால் பொருத்தப்படுகின்றது. ஒருவருக்கு பல்வகை காலணிகள் உள்ளன. இவற்றில் விளையாடுவதற்கான காலணிகள், விருந்தினர்களை வரவேற்கும் போது பயன்படுத்தும் காலணிகள், கொண்டாட்ட நடவடிக்கைகளில் கலந்து கொள்ள பயன்படுத்தப்படுபவை, குளிர் காலங்களில் பயன்படும் தோல் காலணிகள் முதலியவை அடக்கம்.

1 2 3