உடற்பயிற்சிக்கு இல்லை வயது

வாலிபவயதில் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள மட்டுமே உடற்பயிற்சி என்று எண்ணிவிடக் கூடாது. உடற்பயிற்சி தான் நம்மை நீண்டகாலம் நோய்யின்றி வாழச்செய்கிறது. வயதானாலும் உடற்பயிற்சியை விட்டுவிடாமல் தொடர்வது தான் நல்லது. சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் தலைநகரான செந்துவில் 63 வயதான பெண்னொருவர் ஒரு நிமிடத்தில் 97 முறை தண்டால் எடுக்கின்றார். அந்த அளவுக்கு தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். அவர் தான் Huang Tianleng. Wenjiang மாவட்டத்தை சேர்ந்த இவர் 2002 ஆம் ஆண்டு முதல் நாள்தோறும் காலையில் ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்துவருகிறார். அதே நகரத்திலுள்ள Wang Jiyue என்பவர் ஒரு நிமிடத்தில் 100 தண்டால் எடுப்பதை அறிந்ததாகவும், அவருக்கு சவாலாக இருந்து அவரைவிட அதிக தண்டால் எடுத்து சாதிப்பதே தனது விருப்பமெனவும் இவர் தெரிவித்துள்ளார்.
1 2 3
|