குழந்தைகளுக்கு காய்கறி
குழந்தைகள் அதிக காய்கறி உண்ண வேண்டும் என்று நினைக்கிறீர்களா? பெயர்களை மாற்றி உணவளித்து பாருங்கள். குழந்தைகள் அளவிற்கு அதிகமாகவே உண்ண தொடங்கி விடுவார்கள் என்று ஆய்வில் கண்டறிந்துள்ளனர். வழக்கமாக கெரட் கொடுக்கப்படும் குழந்தைகளுக்கு அடுத்த மதிய உணவு வேளையில் இது எக்ரே கெரட் என்று ஏதாவது புதியபெயரில் வழங்க வேண்டுமாம். அவ்வாறு செய்தால் குழந்தைகள் வழக்கமாக உண்பதைவிட அதிகமாக உண்பதை ஆய்வாளர்கள் அறியவந்துள்ளனர். காய்கறிகளுக்கு நகைச்சுவையான பெயர்களை வைத்தால் அதனை சாப்பிடுவதும் மகிழ்ச்சி தரும் என்று குழந்தைகள் எண்ணுகிறார்கள். எனவே அதிகம் உண்ண தொடங்குகிறார்கள் என்று வாஷிங்டனில் நடைபெற்ற ஊட்டசத்து கழக சங்கத்தின் ஆண்டு மாநாட்டில் இந்த ஆய்வை நடத்திய கார்நெல் பல்கலைகழகத்தின் பேராசிரியர் Brian Wansink தெரிவித்தார். 1 2 3
|