 2009ம் ஆண்டு, சீனாவில் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்து பட்டம் பெறும் பட்டத்தாரிகளின் எண்ணிக்கை 61 இலட்சத்தைத் தாண்டி, வரலாற்றில் மிக உயர் பதிவாகிவிடும். சர்வதேச நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணிகளால், அவர்களுக்கான வேலை வாய்ப்பு இப்போது கடுமையான பிரச்சினையாக மாறியுள்ளது. விரைவில் பட்டம் பெறும் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் வகையில், சீன அரசும், பல்கலைக்கழகங்களும் சமூகமும் பல்வகை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
தற்போது, இவ்வாண்டில் பட்டம் பெறவுள்ள மாணவர்கள் வேலை வாய்ப்புகளைத் தேடி பார்க்கும் நேரமாகும். வேலைக்காக விண்ணம் செய்ய பல்வகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படத் துவங்கியுள்ளன. ஆனால், சில திங்களுக்குப் பின், பல்கலைக்கழகங்களிலிருந்து பட்டம் பெற்று சமூகத்திற்கு வரும் இழைஞர்களைப் பொறுத்த வரை, வேலை வாய்ப்பை பெறுவது மீதான நம்பிக்கை அதிகமில்லை. சீன வேளாண் துறை பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறையைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி மாணவி ஒருவர் கூறியதாவது
வேலை வாய்ப்புகளை வழங்கும் 5,6 விண்ணப்ப நடவடிக்கைகளில் கலந்து கொண்டேன். இவ்வாண்டு உரிய வேலை வாய்ப்பை பெறுவது மிகவும் கடினமானது என்று கண்டறிந்தேன். வேலை வாய்ப்புகளும் குறைவாகவே உள்ளன. சிலப் பெரிய கூட்டு நிறுவனங்கள் குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டுக் கூட்டு நிறுவனங்களின் தேவை சுமார் 80 விழுக்காடு குறைந்துள்ளது என்று அவர் கூறினார்.
1 2 3 4
|