
சீனாவின் பல்வேறு கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, பட்டத்தாரிகளுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்க முயன்று வருகின்றன. பீக்கிங் பல்கலைக்கழகம் அண்மையில், வேலை வாய்ப்பு பற்றிய மாநாட்டை நடத்தி, பல பன்னோக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டது. பீக்கிங் பல்கலைக்கழகத்தின் வேலை வாய்ப்பு வழிகாட்டல் மையத்தின் தலைவர் chen yong li கூறியதாவது
மாணவர்களுக்கு போதிய தகவல் மற்றும் விழிப்புணர்வை வழங்க, வேலை வாழ்க்கை திட்டம், வேலை வாய்ப்பு சந்தை, திறமைசாலி அமர்த்துதல் முதலிய துறைகளிலான நிபுணர்களை அழைத்தோம். தவிர, இவ்வாண்டின் வேலை வாய்ப்பு நிலைமை கடுமையானது. ஆகையால், நடுத்தர ஏன் சிறிய ரகத் தொழில் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, பட்டத்தாரிகளுக்கு மேலதிக வேலைவாய்ப்புகளை வழங்க முயன்று வருகின்றோம் என்று அவர் கூறினார்.
சீனக் கல்வி அமைச்சகத்திலிருந்து கிடைத்த புதிய தகவலின் படி, வேலை வாய்ப்புப் பிரச்சினையை ஆக்கப்பூர்வமாகச் சமாளிக்கும் வகையில், இவ்வாண்டில் இணையம் மூலம் வேலைக்கு விண்ணப்பங்களை வரவேற்கும் நடவடிக்கைகள் திங்களுக்கு குறைந்தது 2 முறை நடத்தப்படும்.
அதேவேளையில், வேலை வாய்ப்பு பெறுவதில் பட்டத்தாரிக்களுக்கான வழிக்காட்டல் சேவை பணியும் மேலும் வலுப்படுத்தப்படும். 1 2 3 4
|