
சீனாவின் தொடர்புடைய வாரியங்கள் ஒரு தொகுதி நடவடிக்கைகளை மேற்கொண்டதாக எமது செய்தியாளர் கண்டறிந்தார். பட்டத்தாரிகள் அடிமட்ட நிலை பிரதேசங்களில் வேலை வாய்ப்பை பெறுவதற்கு ஊக்கமளிக்கும் வகையில், சீனக் கல்வி அமைச்சகம் உகந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று இவ்வமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Xu mei அம்மையார் தெரிவித்தார். அவர் கூறியதாவது
2009ம் ஆண்டின் பட்டத்தாரிகளுக்கான வேலை வாய்ப்புப் பணியில் கல்வி அமைச்சகம் மிகவும் கவனம் செலுத்துகின்றது. அவர்கள் அடிமட்ட நிலை பிரதேசங்களில் வேலை வாய்ப்பை பெறுவதற்குப் பெரிதும் ஊக்கம் அளிப்பது நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் மிக முக்கியமானதாகும். மேற்கு பகுதிக்கான தன்னார்வ தொண்டர் திட்டம், வேளாண், கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்கான உதவித் திட்டம், வறுமை ஒழிப்பு திட்டம், கிராம ஆசிரியர் பணிக்கான திட்டம் முதலியவற்றுக்காக ஒரு இலட்சம் பட்டத்தாரிகளை சேகரிக்கவுள்ளோம். தவிர, பல்வேறு இடங்களில் பல்வகை வேலை அமர்த்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் கூறினார்.
பல்கலைக்கழகப் பட்டத்தாரிகளிடையில் வேலை வாய்ப்புத் தொழில் நுட்பப் பற்றாக்குறை என்ற பிரச்சினை குறித்து, சீனாவிலுள்ள ஒரு சமூக அமைப்பு, பிப்ரவரி திங்களில் ஒரு சிறப்புத் திட்டப்பணியை துவக்கியது. திட்டப்படி, சீனாவின் 40க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களின் தகவல் தொழில் நுட்பத் துறையின் பட்டத்தாரிகள், புதிய உயர் தொழில் நுட்ப வளர்ச்சி பிரதேசங்களிலுள்ள 50க்கு மேலான தொழில் நிறுவனங்களுக்குச் சென்று, 3 திங்கள் முதல் அரை ஆண்டு வரையான தொழில் நுட்ப பயிற்சியை பெறுவர். இத்திட்டப்பணிக்குப் பொறுப்பான திரு zhang jian hua கூறியதாவது
இத்திட்டப்பணி ஒருபுறம், பல்கலைக்கழகப் பட்டத்தாரிகளின் வேலை வாய்ப்புப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு துணை புரியும். மறுபுறம், நாட்டின் அறிவியல் தொழில் நுட்ப மூலவள தொழிலின் உருவாக்கத்தை விரைவுப்படுத்தும் என்றார் அவர்.
1 2 3 4
|