• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-19 17:13:35    
அரசுப்பணிக்கான தேர்வுமுறை

cri

சீனப் பண்பாடு நிகழ்ச்சியில் கடந்த இரண்டு முறை, சீனாவில் கிட்டத்தட்ட 1300 ஆண்டுகாலம் நடைமுறையில் இருந்த அரசுப்பணிக்கான, அரச அதிகாரிகளுக்கான தேர்வு வழிமுறைகளை பற்றிய பல தகவல்களை வழங்கக் கேட்டோம். குறிப்பாக கேஜு தேர்வு வழிமுறை, அதன வளர்ச்சி அல்லது மாற்றம், வட்டம், மாநிலம், நாடளவிலான அரசவைக்கான பணியிடத் தேர்வு என பல கட்டங்களாக தேர்வுகள் நடைபெற்றன. மிங் மற்றும் ச்சிங் வம்சக்காலத்தில் 8 பகுதி கட்டுரையின் வடிவில் நடைபெற்ற இந்த தேர்வு, அக்கால சமூகத்தில் கல்வி கற்பதிலான ஆர்வத்தையும், ஊக்கத்தையும் அதிகரித்தது. அனைவருமே சமத்துவமான முறையில் அரசுப்பணிக்கான தேர்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பு, சமூக மறுமலர்ச்சிக்கு துணை நின்றது.. சமூக தகுநிலையில் உயர்வு அடைய பாரபட்சம ஏதுமில்லா ஒரு வழியாக இந்தத் தேர்வுகள் எளிய குடிமக்களும் வாய்ப்பளித்தன.

அரசுப்பணிக்கான தேர்வு நடைமுறையிலிருந்த 1300 ஆண்டுகாலத்தில் கல்வி கற்பதிலான ஆர்வமும், எழுச்சியும் மேலோங்கியிருந்தன. அது அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு உதவியது. சுய் வம்சக்காலத்தில் நடைமுறையில் இருந்த கேஜு என்ற தேர்வு வழிமுறை, ஒரு லட்சம் ஜின்ஷுக்களையும், பல லட்சக்கணக்கான ஜூரென்களையும் உருவாக்கியது. இந்த கேஜூ தேர்வு முறையில் தேர்ச்சிபெற்று பின்னாளில் ராணுவ உத்திகளை வகுத்த போர் தந்திரதாரிகள், தலைசிறந்த நிர்வாகிகள், அரசியல் அறிஞர்கள் ஆனவர்கள் சீன வரலாற்றில் பலர் உண்டு.

பல வேளைகளில் இறுதிகட்ட வெற்றி பெற்றோரில் இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியவர்கள் என பல வயதினரும் இருந்தனராம். 1775ம் ஆண்டில் ச்சியான்லொங் ஆட்சியின் போது நடைபெற்ற தேர்வில் நாடு முழுவதிலாமான தேர்விலிருந்து வெற்றி பெற்றோரில் 90 களில் இருந்தவர் ஒருவர், 80 களில் இருந்த 20 பேர், 70 களில் இருந்த 5 பேர் என முதியோர் பலர் வெற்றியாளர்களாக இருந்தனராம்.

1 2 3